சில நாட்களுக்கு முன் எனக்கு முன் மொழியப்பட்ட ஒரு ஆங்கிலப் பதிவு வருமாறு:
People are often unreasonable, self-centred: Forgive them anyway.
சிந்திக்க வைத்த இந்தப் பதிவை ஒரு சிறிய தமிழ்க் கவிதையாக வடித்திருக்கிறேன்.
அன்புடன்
ரமேஷ்.
இன்று நீசெயும் நற்செயல் அனைத்தும்
நாளை மற்றவர் மறந்திடலாம்.
நன்றி மறந்தார் எனவருந் தாமல்
தொடர்ந்து நற்செயல் செய்துஇரு.
நேர்வழி என்றும் நீசென் றாலும்
நண்பரும் உன்னை ஏமாற்றலாம்
சோர்வும் அதனால் நீயடை யாமல்
என்றும் நேர்வழி சென்றுவிடு .
பலநாள் முயன்றுநீ படைத்திட்ட எதையும்
உலகோர் ஒருநாள் உடைத்திடலாம்.
நிலையே நீயும் குலைந்தி டாமல்
படைக்கும் முயற்சிகள் தொடர்ந்துவிடு
தன்னலம் ஒன்றையே மனதினில் இருத்தி
மண்ணில் செயல்படும் மற்றவரை
எண்ணித் துயரம் என்று மடையாமல்
மன்னித் துன்வழி நடைபோடு.
ஏனெனில் செயல் பயன் பரிமாற்றம்
உனக்கும் இறைவர்க்கும் இடையே தான்.
ஊடே மற்றவர்க் கேது இடம்?
தொடர்ந்திடு உன்பணி தளராமல்.
People are often unreasonable, self-centred: Forgive them anyway.
If you are honest, people may cheat you, but be honest anyway.
What you spend years to build, someone could destroy overnight. Build anyway.
The good you do today, people will often forget tomorrow. Do good anyway.
You see, in the final analysis it is between you and God; it never was between you and them
சிந்திக்க வைத்த இந்தப் பதிவை ஒரு சிறிய தமிழ்க் கவிதையாக வடித்திருக்கிறேன்.
அன்புடன்
ரமேஷ்.
இன்று நீசெயும் நற்செயல் அனைத்தும்
நாளை மற்றவர் மறந்திடலாம்.
நன்றி மறந்தார் எனவருந் தாமல்
தொடர்ந்து நற்செயல் செய்துஇரு.
நேர்வழி என்றும் நீசென் றாலும்
நண்பரும் உன்னை ஏமாற்றலாம்
சோர்வும் அதனால் நீயடை யாமல்
என்றும் நேர்வழி சென்றுவிடு .
பலநாள் முயன்றுநீ படைத்திட்ட எதையும்
உலகோர் ஒருநாள் உடைத்திடலாம்.
நிலையே நீயும் குலைந்தி டாமல்
படைக்கும் முயற்சிகள் தொடர்ந்துவிடு
தன்னலம் ஒன்றையே மனதினில் இருத்தி
மண்ணில் செயல்படும் மற்றவரை
எண்ணித் துயரம் என்று மடையாமல்
மன்னித் துன்வழி நடைபோடு.
ஏனெனில் செயல் பயன் பரிமாற்றம்
உனக்கும் இறைவர்க்கும் இடையே தான்.
ஊடே மற்றவர்க் கேது இடம்?
தொடர்ந்திடு உன்பணி தளராமல்.
No comments:
Post a Comment