திருவிளையாடல் படத்தில் வரும் , கே.பீ.சுந்தராம்பாள் பாடிய, " ஒன்றானவன் ...... " என்று தொடங்கி எண் வரிசைப்படி முருகன் மீது பாடும் பாட்டு மறக்க முடியாத ஒன்று.
உள்மனதில் அதன் தாக்கமோ என்ன தெரியவில்லை, சென்ற வாரம் காலையில் பூங்காவில் நடந்துகொண்டிருக்கும்போது தோன்றிய சில வரிகள் , சில நாட்கள் கழித்து , இந்தப் பாடலாக உருவெடுத்து இருக்கின்றன.
முருகனுக்கும் , உங்கள் பார்வைக்கும் சமர்ப்பிக்கிறேன்.
அன்புடன்
ரமேஷ்
முருகனை "எண்ணு"வோம்.!
ஓரிரண்டு# தேவியராய் வள்ளிதே வானையை #1*2
தாரமாய் மணங்கொண்ட தார்மார்பினன்
ஈரிரண்டு# நால்வேதத் துட்பொருளை உணர்ந்தபின் #2*2
பிரணவத்தை ஈசர்க்கு போதித்தவன்
மூவிரண்^ டாறான முறுவல் முகங்களுடன் ^ 3*2
சேவிக்கும் அடியார்க் கருள்செய்பவன்.
நாலிரண்டு^ எண்திக்கும் அரக்கரை அழித்திடவே ^ 4*2
வேலெடுத்து போர்தொடுத்து வென்றிட்டவன்.
ஐயிரண்டு^ அவதாரம் எடுத்துலகைக் காத்திடும் ^5*2
மைவண்ணன் திருமாலின் மருகனவனே!
ஆறிரண்டு^ பன்னிரண்டு தோள்களுடை முருகனுக்கு ^ 6*2
வேறுஒரு தெய்வமும் நிகராகுமோ?
ஏழிரண்டு^ பதினான்கு இரவுகள் வளர்ந்திட்ட ^ 7*2
முழுமதியைப் பழித்திடும் வதனத்தினன்.
எட்டிரண்டு^ பதினாறு செல்வமும் சிறப்புடன் ^ 8*2
கிட்டிடும் குமரனைத் துதிப்பவர்க்கே.
.
சித்தர்க ளீரொன்பதில்^ மூத்தமுனி அகத்தியர்க்கு ^ 9*2
முத்திதரும் மந்திரங்கள் போதித்தவன்.
பூதங்கள், புலன்,பிராணன் , இந்திரியங் கள்என்ற ^ 10*2
பத்திரு வத்தையும்^ உருவித்தவன்.
எண்கணக்கி லொன்றுமுதல் பத்துவரை யும்எழுதி
பண்புனைந் துன்புகழ் பாடினேனே!
என்கணக்கு இப்பிறவி. யில்முடியு முன்னமே
எனையாண்டு அருள்புரிவாய் குமரவேளே!
உமையாளின் இளைய மகனை நீங்கள் கணித கோணத்தில் நோக்கி புனைந்த பாவின் சிறப்பை எண்ணி எண்ணி வியக்கிறேன் !!
ReplyDeleteOne more beauty from Ramesh! Stay Blessed!
ReplyDelete