Search This Blog

Feb 20, 2016

பச்சௌரியின் கச்சேரி

பச்சௌரியின் கச்சேரி
பிப்ரவரி மாதம் முதற்பகுதியில் மக்களை மிகவும் கலக்கிய செய்தி சுற்றுச் சூழலைப் பசுமையாக பாதுகாக்கும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் TERI என்ற நிறுவனத்தின் பச்சோரி - யைப் பற்றியதாகும்.
2015 பெப்ரவரி மாதம் , TERI யில் வேலை செய்யும் ஒரு பெண்ணிடம் முறைகேடாக நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பச்சௌரி, நீண்ட விடுப்பில் சென்றார். அவர் மீது போலிசாரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. TERI -யும் ஒரு உள்விசாரணைக் குழுவை அமைத்தது.
இரண்டும் ஆமை வேகத்தில் நகர்ந்துகொண்டு இருக்கின்றன.
( உங்களில் யாருக்காவது இரண்டு (மூன்று?) ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பாகப் பேசப்பட்ட தருண் தேஜ்பால் பற்றி இன்று நினைவிருக்கிறதா? அது இன்னும் ஓடிக்கொண்டு இருக்கிறது. Law is taking its own course! அது போலத்தான் இதுவும்! ).
இது இப்படி இருக்கையில், திடீரென்று இந்த பெப்ரவரி மாத முதலில்  "பச்சௌரிப்  பெரியவர் " மீண்டும் TERI -யின் அரியாசனத்தில் அமர்ந்தார்! அது மட்டும் அல்ல - அவருக்கு பதவி உயர்வும் அளிக்கப்பட்டது.!
சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பது இதுதானோ?
உடனே கண்டனக் குரல்கள் எழுந்தன.
அது மட்டுமல்ல - வேறு ஒரு பெண்மணியும் அவர் மீது " முறைகேடாக நடந்துகொண்டதாக " குற்றச்சாட்டை எழுப்பினார். முன்னமேயே இதை TERI நிர்வாகத்திடம் பதிவு செய்திருப்பதாகவும், ஒரு பயனும் விளையவில்லை என்றும் கூறுகிறார்.
மடை திறந்தது போல் மேன்மேலும் அவர் மீது இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் குவியத் தொடங்கி இருக்கின்றன.
ஒரு முக்கியமான விழயம் - டாக்டர். பச்சௌரியின் வயது 75 முடிந்து 76. நிச்சயமாக 'இளமை ஊஞ்சலாடுகிறது" தான் !
இந்த  " பச்சௌரியின் கச்சேரி " க்கு  எப்போது மங்களம் பாடி முடிப்பார்களோ?
இந்த நிகழ்வு  பற்றி ஒரு ஆதங்கக் கவிதை.
அன்புடன்
ரமேஷ்.


பச்சையாக   சூழ்நிலையைப்    பாதுகாக்கும்    குழுமத்தின் *
உச்சியிலே    தலைவராக    அமர்ந்திருக்கும்    ஒருவராம்
நச்சேறிய    மனம்படைத்த    பச்சௌரிப்**    பெரியவர்
லஜ்ஜையின்றி    கன்னியரைக்     காமத்தோடு    நோக்கியே
இச்சைகொண்டு    இணங்குமாறு    பலருடனே    பேசியே
நச்சரித்து    நாள்தோறும்    நச்சுவார்த்தை    கக்கினார்.


அச்சமின்றி    கொச்சைவார்த்தை    உச்சரித்த    அவரையே
மெச்சிஅவர்க்கு    மேலுமே    மேலும்பதவி    உயர்த்துறார் !
இச்சகத்தில்    இதனையொத்த    இழிசெயலும்     நடக்குமோ?
கச்சைகட்டி    நாமெல்லாம்     இச்செயலை    எதிர்ப்பமே!
எச்சமொத்த    இச்செயலை    செய்தபச்    சௌரியை
நிச்சயமாய்    நீதிமுன்னர்    நிறுத்தவேண்டும்;   செய்வரோ?


* TERI -
** Pachauri RK

5 comments:

  1. கொஞ்ச நாள் முன் உங்களிடம் விடுத்துதிருந்தேன் ஒரு வேண்டுகோள் - பச்சை நிறத்தின் சிறப்பை பற்றி-. இந்த பசுமை உங்கள் "பா"க்கு ஒரு சுமையா ? அதைவிட்டுபுட்டு பச்சௌரியின் பாலியல் பற்றி பச்சையாக எழதுகிரீர்??!

    ReplyDelete
  2. எப்பவும் போலே "தனி வாசிக்கும்" போது வெளியே வந்துவிட்டீரோ ??

    ReplyDelete
    Replies
    1. அவரைத் தனி வாசிக்கவே விடலையே !

      Delete