புல்வெளியில் முளைக்கும் களைகள்
சில மாதங்களுக்கு
முன், என்னுடைய மூத்த மகனின் வீட்டில் , ஒரு புல்வெளி அமைத்தோம்.
முதலில் நிலத்தை
சமன் செய்து, புது மண் பரப்பினோம்.அதன் மேல், புல்விதைகளைத் தூவி,
அவை முளைக்கும்
வரை அவற்றை மிகையான வெயிலில் இருந்து காக்க, அதன் மீது வைக்கோல் பரப்பினோம்.
தினமும் தேவையான
அளவு நீர் பாய்ச்சி , அதன் மீது ஒருவரும் நடக்காமலும், பறவைகள் அவ்விதைகளைத தின்று
விடாமலும் பாதுகாத்து , நன்கு வாரங்களுக்குப் பின், பச்சைப் பசேல் என்று புல்வெளி உருவானது!
ஆனால் , புல்லின்
நடுவே பெருமளவு பூண்டுகளும் வளர்ந்து, புல்வெளியின் அழகைப் பாழ் செய்துவிட்டன!
இவைகளை களைந்தெடுத்த
பின்புதான், புல்வெளி முழுஅழகுடன் ஜொலித்தது!
இதிலிருந்து, நாம்
கற்கும் வாழ்க்கைப் பாடம் ஒன்றை, இந்தக் கவிதை மூலம் கூறுகின்றேன்.
அன்புடன்
நிலமுழுதும் சமன்செய்து புதிதாக மணல்பரப்பி
இளம்புல்லின் விதைவிதைத்து
அதன்பின்னே உரம்தெளித்து
நாள்தோறும் நீர்
பாய்ச்சி புல்வெளியைப் பேணுகையில்
நல்கவனம் அதில்செலுத்த
நாம்சிறிது மறப்போமால்
புல்லதனைப் புறம்தள்ளி அதனூடே பூண்டுபல
வல்லியதாய் வளர்ந்திடுமே
; இதிலுண்டு ஓர்பாடம்
மனமென்னும் விளைநிலத்தை
நன்றாகப் பதம்செய்து
குணமென்னும் விதைவிதைத்து நல்லறிவாம் உரமிட்டு
நன்னடத்தை நீர்பாய்ச்சி
நாளும்நாம் வாழுகையில்
நற்குணங்கள் மட்டும்நாம் விளைத்திடவே நினைத்தாலும்
தற்செயலாய் அவற்றிடையே கோபங்கள் , காமங்கள்
தற்பெருமை , தன்னலங்கள்
இவைபோன்ற பூண்டொக்கும்
வற்குணங்கள் வந்தடைய
வாய்ப்புகளும் பலவுண்டு ;
சற்றுமவை சேராமல்
களையெடுத்து வாழ்வோமே !
என் பதிவுகளைப் பற்றிய உங்கள் கருத்துக்களை எளிதாக நீங்கள் அளித்திட உதவியாக ஒரு புதிய 'பன்முகத் தெரிவுப் பகுதி ' ((multiple choice option )இணைக்கப்பட்டுள்ளது. (see at the bottom of the page). இதில் சென்று உங்கள் மதிப்புரைகளைப் பதிக்கலாம். தவறாமல் செய்யுங்கள். இதை முந்தைய எல்லாப் பதிப்புகளுக்கும் செய்யலாம். உங்கள் கருத்துக்கள் எனக்கு மிகவும் உதவும். நன்றி.
please take a few seconds to rate this poem using the multiple choice option section , at the bottom of the blog. This feedback will be useful to me for improving . The rater,s identity is protected . Please do this for the earlier posts also .

Very nice Appa!
ReplyDelete