Search This Blog

Dec 29, 2015

சகிப்புத்தன்மை.

சகிப்புத்தன்மை.

சகிப்புத்தன்மையைப் பற்றி அனல் பறக்கும் விவாதங்கள் தொலைக்காட்சியில் நடந்து முடிந்துவிட்ட இந்த நேரத்தில் எனது நண்பர் எனக்கு அனுப்பிய ஒரு துணுக்கு இதோ!
 
"ஒரு கடையில் மூன்று மதங்களின் கடவுள் படங்கள் பாகுபாடு இன்றி ஒருசேர இருந்தால் அவன் இந்து என்று அறிந்து கொள்ளலாம்."
 
நான் கண்டவரையில் இது முற்றிலும் உண்மை. .
 
நான் சிறுவனாக  இருக்கும்போதே எனக்கு என் பெற்றோர் சொல்லித்தந்த கடவுள் வாழ்த்துகளில் ஒன்று --
 
" ஈச்வர அல்லா தேரே நாம்"என்ற வரியை உட்கொண்ட " ரகுபதி ராகவ " என்று தொடங்கும் பாடல்!
  
மற்ற மதங்களை நம் மதத்தோடு  ஒன்றாக நோக்குவது , அல்லது, குறைந்த பட்சம் அவைகளை இழிவு செய்யாமல் இருப்பது , என்பது இந்துக்களின் பிறவிக் குணம்.
 
ஆனாலும் இந்த சகிப்புத் தன்மைக்கு , பல்வேறு காரணங்களால், இப்போது ஒரு சோதனைக் காலம் வந்திருக்கிறது.
 
எல்லா இந்தியர்களுக்கும் இப்போது இந்த சகிப்புத்தன்மை மிக அவசியம்.
 
இது   பற்றி கொஞ்ச நாட்கள் முன்பு நான் எழுதிய
" அகமது,அமரன் அல்பான்ஸ் " என்ற கவிதை ஒன்று ----
படித்து கருத்தளியுங்கள்.
 
அன்புடன்
ரமேஷ்.


முக்கணன்    மாலவன்     நான்முகன்    என்னும் 
முத்தேவரைத்   தொழும்    இந்துக்கள்    எனினும் 


மெக்கா    செல்லும்    முஸ்லிம்கள்     எனினும் 
மேய்ப்பர்    ஏசுவைத்    தொழுபவர்    எனினும்
 
சிகைதனை    முடிந்த     சீக்கியர்    எனினும் 
அகமது,   அமரன்,    அல்பான்ஸ்    எனினும்
 
அகமது    ஒன்றாய்    அமைதியைக்    காத்து 
நகமும்    சதையும்    இணைந்துள.  வாறே

விகுதிகள்    விடுத்து    வாழும்    நெறியால் 
நிகரில்    நாடெனும்    புகழினைச்    சேர்ப்போம்.    "

1 comment:

  1. நான் எகிப்தில் இருக்கும்போது

    உங்களுக்கு ஏன் அத்தனை கடவுள் என்று கேட்டனர். நான் சொன்னேன் 80 மில்லியன் மக்களைக் காக்க ஒரு அல்லா போதும், ஆயிரம் மில்லியன் மக்களைக் காக்க அத்தனை வேண்டுமே.

    உங்கள் கடவுளை ஏன் மனித ரூபத்தில் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டனர். நான் சொன்னேன் நாம் உதவி வேண்டும்போது கடவுள் நேரே வருவதில்லை சக மனிதனாகத்தான் உதவுகிறான். ரூபமில்லா மதம் எது வணங்குவதற்கு கிருத்தவருக்கு சிலுவையும், முகம்மதியருக்கு கலிபாவும் இந்துக்களுக்கு பல ரூபங்களும்தானே.

    அகமது அகம் அது அருமை அருமை

    ReplyDelete