இந்தியாவின் பகுத்தறிவாளர்கள்
பகுத்தறிவாளர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்கள் , கடவுள் என்று ஒருவர் இருப்பதை ஒப்புக்கொள்வதில்லை.
இது பற்றி நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. அது அவர்களுடைய கருத்து.
கடவுள் இருக்கிறார் என்று ஒத்துக்கொள்ளும் சிலருக்குக் கூட , இந்த ஒரு சந்தேகம் இருக்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனாலும் அவர்கள் அதை வெளியே காட்டிக்கொள்வது இல்லை! " எதற்கும் இருக்கிறார் என்று நினைத்து வழிபடுவோமே, ஒரு insurance ஆக இருக்கட்டுமே என்ற ஒரு நிலைப்பாட்டை எடுப்பவர்கள்.
ஆனால் கடவுள் இல்லை என்று சொல்பவர்களில் கூட , பெரும்பான்மையோர் இந்து மத எதிர்ப் பாளர்களாகத்தான் இருக்கிறார்களே தவிர, அவர்களின் வழிபாடுகளிலும் , பழக்க வழக்கங்களிலும் குறுக்கிட்டுக் குறை சொல்கிறார்களே தவிர, மற்ற மதங்கள் பற்றியோ, அந்தக் கடவுள்களைப் பற்றியோ ஒன்றும் சொல்வதில்லை. வாலைச் சுருட்டிக்கொண்டு இருப்பதோடு மட்டும் இல்லாமல் , அவர்களைப் புகழ்ந்து பேசவும் செய்கிறார்கள்.
இது vote bank politics யையும் தாண்டி, இந்து மதத்தின் மீது அவர்களுக்கு ஒரு காழ்ப்புணர்ச்சி இருப்பதைக் காட்டுவதாக எனக்குத் தோன்றுகிறது.
இதற்கு சரித்திர ரீதியாக பல காரணங்களைக் கூறினாலும், இந்த நிலைமை இன்று இருப்பது ஒரு நிதர்சனமான உண்மை.
தமிழ் நாட்டில் ரொம்ப நாட்களாக , இது தலை தூக்கி நிற்பதை நாம் அறிந்தாலும், சமீபத்திய நிகழ்வுகள், இது ஒரு நாடு தழுவிய செயல்பாடாக இருப்பதை காட்டுவதாக நான் நினைக்கிறேன்.
இது என் கருத்து. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இது பற்றிய ஒரு கவிதை .
அன்புடன்
ரமேஷ்
நான் ஒரு பகுத்தறிவாளி!
இந்துமதக் கடவுளரை.
இகழ்ந்தே நான். பேசுவேன்
வந்திக்கும். அனைவரையும்.
நிந்தித்து. ஏசுவேன்
கல்லைக். கடவுளென்று.
சொல்பவரைத். தூற்றுவேன் .
ஆனாலும். வேற்றுமதத். தனைவரையும். போற்றுவேன்
ஏனென்றால். நான் ஒரு
பகுத்தறிவாளி!
கொழுகொழு என்றிருக்கின்றார் ; இவர்க்கெதற்கு உணவென
இழுக்காய் நான் இகழ்ந்தாலும், இப்தார்
விருந்திலே
தலையில் ஒரு தொப்பியுடன் தாழ்த்தி
வணங்குவேன்!
வேதியரை சாதிவெறி கொண்டோரெனத் தூற்றுவேன்;
பாதிரிகள் மட்டும்மிக நல்லோரெனப் பாடுவேன்!
இமாம்கள் எதுவேனும் சொன்னார்கள் என்றாலே
ஆம்ஆம் அந்த பாட்வா°° அவர் கோட்பாடென்று கூறுவேன் ..
ஏனென்றால். நான் ஒரு
பகுத்தறிவாளி!
பணமாற்றம் நேருகையில் கண்மூடிக்
கொள்ளுவேன்.
சிறுபான்மை. இனத்தாரின்
உரிமைஎனப் பாடுவேன்!
திரும்பி அவர் வீடு வந்தால் * தவறிதென்று சாடுவேன்.
ஏனென்றால். நான் ஒரு
பகுத்தறிவாளி!
சரஸ்வதியை ஆடையின்றி
எம்.எப்.ஹுசைன் தீட்டினால்
விரசமில்லை; கலைக்கண்ணோடு பாரு என்று கூறுவேன்.
தஸ்லிமாவைத் *** தாக்கினாலும், ருஷ்டி நூலைத் *** தடை செயினும்
இஸ்லாமிய மதத்தையவர் இகழ்ந்தாரென்று தாங்குவேன்.
ஏனென்றால். நான் ஒரு
பகுத்தறிவாளி!
please take a few seconds to rate this poem using the multiple choice option section , at the bottom of the blog. This feedback will be useful to me for improving . The rater's identity is protected . Please do this for the earlier posts also .
v
What you convey is absolutely true and presented nicely.
ReplyDeleteI am not sure all these attributes are due to Rationalist mind set! Just we in South of India are more tolerant than those Religious fanatics in the North. We are docile or even imbecile?
ReplyDelete