"கொட்டோ கொட்டென்று " பெய்த மழையைத் " திட்டோ திட்டென்று " திட்டித் தீர்தாகி விட்டது!
மழை தந்த துயரங்கள் ஏராளம் ; எனினும், அதற்குள்ளும் ஒரு மிகச் சிறிய ஆதாயம்- a silver lining in the dark clouds !
இந்த நூற்றாண்டின் இயந்திரச் சாதனங்கள் எதுவும் இல்லாமல், அமைதியான ஒரு வாழ்க்கை முறையை -அது நம் மீது திணிக்கப் பட்டதி என்றாலும்- நான் ரசித்தேன். நீங்களும் ரசித்திருப்பீர்கள்!
அந்த மழையின் மறுபக்கம் பற்றி ஒரு கவிதை!
அன்புடன்
ரமேஷ்
என் பதிவுகளைப் பற்றிய உங்கள் கருத்துக்களை எளிதாக நீங்கள் அளித்திட உதவியாக ஒரு புதிய 'பன்முகத் தெரிவுப் பகுதி ' ((multiple choice option )இணைக்கப்பட்டுள்ளது. (see at the bottom of the page). இதில் சென்று உங்கள் மதிப்புரைகளைப் பதிக்கலாம். தவறாமல் செய்யுங்கள். இதை முந்தைய எல்லாப் பதிப்புகளுக்கும் செய்யலாம். உங்கள் கருத்துக்கள் எனக்கு மிகவும் உதவும். நன்றி.
யார் என்ன மதிப்பீடு செய்து இருக்கிறீர்கள் என்பது ஒருவருக்கும் தெரியாது!
please take a few seconds to rate this poem using the multiple choice option section , at the bottom of the blog. This feedback will be useful to me for improving . The rater,s identity is protected . Please do this for the earlier posts also .
மழையின் சீற்றம் தணிந்த பின்னரும் ,
தேங்கிய தண்ணீர் வடிந்த போதிலும்
மின்சாரம் இன்னும் வரவே யில்லை;
அதனா லென்ன பரவா யில்லை!
தொலைபே சிகளின் தொடர்பே இல்லை!
இது ஒரு பெரிய இடரே இல்லை!
தொலைக்காட். சிகளும் தெரிவது இல்லை!
போனால் போகட்டும் விட்டது தொல்லை!
இரண்டா யிரத்துப் பதினைந்தை விடுத்து,
பற்பல ஆண்டுகள் பின்னே சென்றேன்!
இதுவரை இருந்த இரைச்சல் விலகி ,
இதமாய் ஒலிக்கும் அமைதியைக் கேட்டேன்!
அடைமழைக் கஞ்சி அடங்கிய பறைவைகள்,
கூடுவிட் தெழுந்து . கூவும் குரல்கள் ,
தூறல் மழையின் சாரல் தாளம் ,
பறவைகள் . குரலுக் கியற்கையின் மேளம்!
இலைவிட் டிறங்கும் மழைநீர்த் துளிகள்,
தரைவிழுந் தெழுப்பிடும். "டக்-டக்" ஒலிகள்,
சலசலத் திடும் இலைகளின் சிலும்பல்,
தவளைக் கூட்டத்தின். கவலைப். புலம்பல் ,
எங்கும். நிறைந்தவிவ் வியற்கை ஒலிகள்,
கேட்கையில் மறைந்ததென் மனதின் வலிகள் !
எங்கனம் உரைப்பேன் என்மன நிலையை?
இதுபோல் இதுவரை. நிறைந்தது. இல்லை!
முகில்கள். வானை. மூடிவிட். டதால்,
பகலெது , இரவெது , புரியவே இல்லை!
மின்விளக். குகளும் எரியா ததனால்,
நேரமும் கொஞ்சமும். நகரவே. யில்லை .
பூஜை அறையில் எரியும் திரியில்,
மெழுகு வத்தியின் கடைத்துளி உயிரில்
சற்றே பரவும் ஒளியின் பார்வை;
அதனைத் தாண்டினால் , . இருளின் போர்வை.
சுருங்கும் ஒளி கொஞ்சம் இருக்கும் போதே,
இருக்கும் சோற்றைப். பகிர்ந்து கொண்டோம்.
நெருங்கி அமர்ந்து உறவுடன் உண்டோம்!
வருத்தமொன் றின்றி. சிரித்து. மகிழ்ந்தோம்!
இன்னலும், இடரும். இம்மழை. கொணர்ந்தது ,
எனினும் கண்டோம் . மற்றொரு பக்கம்,
முன்னொரு கவிஞன் மொழிந்தது போல ,
மாமழை போற்றுதும்! மாமழை. போற்றுதும்!

உண்மை. வீடெங்கும் ஏற்றிய அகல்கள் மெழுகு வர்த்தி கிடைக்க வில்லையே என்ற ஏக்கமின்றி.
ReplyDeleteகாய்களில்லா வற்றல் குழம்பும் சுட்ட அப்பளமும் உண்டோம் எல்லோரும் ஒரே நேரத்தில்.
சுற்றுச் சுவரிலிருந்த பிளவு வழியே எங்கள் வீட்டு வெள்ளம் பக்கத்து மனையில் வடியும் ஓசை அருவி போல் ஒலித்ததை அமைதியான இரவு முழுவதும் கேட்டுத் திளைத்த இன்பம்.
நைட்டிங்கேல் அம்மையாரைப் போல கையில் (டார்ச்) விளக்கேந்தி பாத் ரூம் சென்ற அனுபவம்.
மூன்று நாட்கள் வெள்ளத்தால் வெளியிடங்களுடன் பாதை இணைப்பில்லை, பனிரெண்டு நாட்களாக மின்சாரம் இல்லை, பதினைந்து நாட்களாக தகவல் தொடர்பில்லை என வாழ்ந்தோம் பல்லாண்டுகளாக மறந்து விட்ட அமைதியான எனது பால பருவத்து வாழ்க்கை.