காலையில் காற்று வாங்கிக்கொண்டு வாக்கிங் செல்லும்போது , சில சமயங்களில் கவிதைகள் எழுத கருப்பொருள்கள் கிடைப்பதுண்டு. சாதரணமாக நான் " நான் உண்டு , என் வாக்கிங் உண்டு" என்று போய்விட்டு வந்துவிடுவேன். கூடவும் , எதிரிலும் வரும் சக வாக்கர்ஸ்- ஐ ரொம்ப பார்ப்பது இல்லை. என் மனைவி கூட " ஏன் இப்படி தலையைக் குனிந்துகொண்டே நடக்கிறீர்கள் " என்று கேட்பாள். என் பையனும் " நீ தரையைப் பார்த்து தானே நடக்கிறாய்? எப்படி இயற்கைக் காட்சிகளைப் பார்த்ததுபோல் கவிதை எழுதுகிறாய்?" என்று கேட்பான். இப்படி நடப்பதாலேயே, மூன்று வருஷ வாக்கிங்கில் , மிகச் சில சமயங்களிலே நின்று மற்றவர்களுடன் பேசியிருக்கிறேன்..
இதற்கு விதிவிலக்காக, சில நாட்களுக்கு முன்,நிழல்கள் மரப் பூங்காவில் நான் வாக்கிங் போகும்போது நண்பர் கல்யாணத்தை சந்தித்து நானாக வலியச் சென்று பேசினேன்.( இது பற்றி பின்னால் வேறு ஒரு blog -ல் கூறுகிறேன்.). அவர் ஹிந்து பத்திரிகையின் தெற்கு மண்டல அரசியல் தலைமை நிருபராக இருந்து ஒய்வு பெற்றவர். அவர் , முந்தின தினம் படித்த ஒரு துணுக்கை என்னுடன் பகிர்ந்துகொண்டார் அந்தத் துணுக்கு -
முயல் பல நாள் வெல்லலாம்.
ஆமை ஔ நாள் வெல்லலாம்..
ஆனால்
முயலாமை ஒரு நாளும் .வெல்லாது.".
என் மனதில் பதிந்த அந்தத் துனுக்கின் தூண்டிதலில் எழுந்த எண்ணங்கள் ஒரு வெண்பா வடிவில் -
முயற்சி திரு வினையாக்கு மெனமுன்னோர் உரைத்தனரே
முயலாமை தோல்வி தருமே ---- முயன்றதால்
முயலையும் வென்றதே ஆமையும் இவ்வுலகில்
இயலாத தொன்றில்லை காண்!
ஆமைக்கு முயல் தன்னை விட வேகமாக ஓடும் என்று தெரியாமலா இருக்கும்? இருந்தும் , முன்னால் பல தடவை தோற்றிருந்தும் , ஏன் பந்தயத்தில் பங்கேற்றது? என்றாவது ஒரு நாள் நாம் வெல்லுவோம் என்ற ஒரு நம்பிக்கைதானே?
நம்பிக்கையே மனித வாழ்க்கையின் அடிப்படை..
அன்புடன்
ரமேஷ்.

இது எழுதுவதற்கும் பொருந்துமே!
ReplyDeleteமுயலாமை தானே தன்னம்பிக்கையை தர மறுப்பது!!
அன்புடன்,
எஸ் வெங்கடேசன்..
என்னுள்ளே உள்ள தமிழ் ஆர்வத்தைத் தூண்டி விடுகின்றன உங்களது பதிவுகள்.
ReplyDeleteஇயலாமை இல்லாதிருந்தும் முயலாமையால் வெளி வரவில்லை எதுவும்.
கடந்த இரண்டு மணி நேரமாக உங்களது பதிவுகளை புதியதிலிருந்து பின்னோக்கிப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் மற்ற வேலைகளை ஒதுக்கி விட்டு.
பல மாதங்களாகத் தள்ளிப் போட்டிருந்த ப்ளாக் ஆரம்பிக்கும் வேலையைத் தொடுங்குவேன் என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள. (என்னுள்ளே எழும் எண்ணங்கள் என்று பெயரிட்டு விட்டேன் பல மாதங்கள் முன்பு.)