Search This Blog

Oct 22, 2015

முழுமையின் வடிவம்


If all the Upanishads and all the other scriptures happened all of a sudden to be reduced to ashes, and if the first verse of in the Ishopanishad were left in the memory of the Hindus, Hinduism will live for ever."
Mahathma Gandhi.
மகாத்மா காந்தியால் இவ்விதம் புகழப்பட்ட ஈசா உபநிஷத்- தின் அந்த முதல் செய்யுள் இதுதான்--

ओं पुर्णमदः पूर्णमिदं पूर्णात्त् पुर्णमुदच्यथे I
पूर्णस्य पूर्णमादाय पुर्णमेवावशिष्यते II

ஓம் பூர்ணமதம் பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே I
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே II
 
அதன் ஆங்கில, தமிழ் பொருளாக்கம் வருமாறு-----

ஆங்கிலம்

All this is full . All that is full.
From fullness, fullness comes.
When fulness is taken from fullness,
Fullness still remains.
(translation by Eknath Easwaran in his book UPANISHADS)
 
தமிழ்
இறைவன் முழுமையானவர் !
இந்த உலகம் முழுமையானது !
முழுமையான இறைவனிலிருந்து முழுமையான இந்த உலகம் தோன்றியது !
முழுமையிலிருந்து முழுமையை எடுத்த பின்னும்
முழுமையே எஞ்சியுள்ளது!
(( ஈசாவாஸ்ய உபநிஷதம் - ஸ்ரீ ராமகிருஷ்ண மேடம் வெளியீடு  - விளக்கியவர்- சுவாமி ஆசுதோஷானந்தர் )

இந்தத் தமிழாக்கம் என் கவிதை வடிவில்--

முழுமையின்      வடிவம்      இறையவனே !
இறைவன்      படைத்தது      இவ்வுலகே!
முழுமையி     லிருந்து      முளைத்தத    னால்- இவ் 
வுலகும்      முழுமைத்      தன்மையதே !
முழுமையி       லிருந்து       முழுமைதனை
முழுதாய்      எடுத்து      முடித்தாலும்
பழுதில்     லாமல்      மிஞ்சுவதும்
முழுமை      என்றே      உணர்வாயே !














































 
 

3 comments:

  1. I don't think this is literal translation, because there is no mention of God in the original text but only implied.

    ReplyDelete
    Replies
    1. பதிவைப் பார்த்து கருத்தைப் பகிர்ந்ததற்கு நன்றி.

      நீங்கள் கூறியபடி இந்தக் கவிதை மூலத்தின் வரி மொழிபெயர்ப்பு அல்ல. .
      மூலத்தில் " அதம் " என்பது இறைவனையும் , "இதம் "என்பது உலகத்தையும் குறிக்கும்.
      இதைத்தான் பதிப்பில் நான் கொடுத்துள்ள சுவாமி அசுதோஷானந்தரின் உரை விளக்குகிறது.

      கவிதையில் இதைத்தான் பிரதிபலித்து இருக்கிறேன்.


      Delete
    2. அதம் , இதம் என்ற சொற்களுக்குள் இவ்வழு பெரிய உலகம் அடங்கி உள்ளது என்பதை என்னால் மற்ற அனைவரும் அறிய நேர்ந்தது. விளக்கத்துக்கு மிக்க நன்றி.

      Delete