இப்போது நவராத்திரி.
ஒன்பது நாட்களும்,
,துர்க்கை , சரஸ்வதி, லக்ஷ்மி வடிவங்களில்
தேவியை வழிபடும் நாட்கள்.
அண்டங்களை எல்லாம்
துன்புறுத்தி வந்த மகிஷாசுரன் என்னும் அரக்கனை
வதம் செய்ய, மும்மூர்த்திகளும், பிற தேவர்களும் இணைந்து , துர்காதேவியைத் தோற்றுவித்து,
அவளுக்கு சகல ஆயுதங்களையும் அளித்ததாக , மகரிஷி மார்க்கண்டேயர் எழுதியுள்ள 'துர்கா சப்தசதி ' என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது.
(Details in English are appended at the end)
இவ்வாறு அவதாரம் எடுத்த
துர்க்கை மகிஷாசுரனோடு போர் புரிந்து , அவனை அழித்ததை நவராத்ரியின் போது கொண்டாடுகிறோம்.
இதைப் பற்றி ஒரு கவிதை.
படித்து தேவி அருள் அடையுங்கள்.
ரமேஷ்
துர்க்கை அவதரித்தல்
முக்கண்ணன் முகமளித்தான்; காலனும் குழல்தந்தான்.
அக்கினியும் அவள்மூன்று கண்ணா யினான்
நீள்நாசி திருவுக்கு அரசன்* அளித்தான்
பல்வரிசை பிரஜாபதி தேவர் தந்தார்.
விஷ்ணுஅவர் வரமாக கரமனைத் தையும்
அஷ்டவசு தேவர்கை விரல்அனைத் தையும்
தண்ணிலவு கொங்கையையும் வருணன்கால் தொடைகளையும்
மண்ணரசி** பிருட்டத்தையும் அளித்து மகிழ்ந்தார்.
பிரமனும் பாதம்தர பருதிகால் விரல்கொடுக்க
துருக்கை அவள் தெய்வத்திரு உருக்கொண்டனள் !
அக்கினியும் அவள்மூன்று கண்ணா யினான்
நீள்நாசி திருவுக்கு அரசன்* அளித்தான்
பல்வரிசை பிரஜாபதி தேவர் தந்தார்.
விஷ்ணுஅவர் வரமாக கரமனைத் தையும்
அஷ்டவசு தேவர்கை விரல்அனைத் தையும்
தண்ணிலவு கொங்கையையும் வருணன்கால் தொடைகளையும்
மண்ணரசி** பிருட்டத்தையும் அளித்து மகிழ்ந்தார்.
பிரமனும் பாதம்தர பருதிகால் விரல்கொடுக்க
துருக்கை அவள் தெய்வத்திரு உருக்கொண்டனள் !
** - மண்ணரசி = பூமாதேவி
துர்க்கையின் படைக்கோலம்
திருமாலின்
சக்கரம்
ஒருகரத்திலே
திரிசூலம் சிவனளித்த தொருகரத்திலே
இந்திரன் வணங்கித்தன் வஜ்ராயுதம்
தந்ததைக் கொண்டனள் ஒருகையிலே
திரிசூலம் சிவனளித்த தொருகரத்திலே
இந்திரன் வணங்கித்தன் வஜ்ராயுதம்
தந்ததைக் கொண்டனள் ஒருகையிலே
வாயுதே வன்தந்த வில்லம்புகள்
ஆயுதமாய் ஏந்தினாள் ஒருகையிலே
காலனின் தண்டமும் வருணனின் சங்கமும்
சூலியவள் சூடினாள் இருகரங்களில்.
ஆயுதமாய் ஏந்தினாள் ஒருகையிலே
காலனின் தண்டமும் வருணனின் சங்கமும்
சூலியவள் சூடினாள் இருகரங்களில்.
மகிஷாசுர வதம்
உவந்தளித்த தேவர்படைக் கலங்களைப் பூண்டனள்
செந்தழலோன் சீற்றமதைக் கண்களில் ஏற்றினள்
இமயவான் அளித்தஅரி மாமீது ஏறினள்
சமர்புரிந்து மகிஷனெனும் அரக்கனை வதைத்தனள்
துதி
எருதுருக் கொண்டமகி ஷாசுரன் செருக்கறுத்து
பொருதவன் சிரம்கொய்த துர்கா தேவியை
கருத்திலே நிறுத்திநவ நாட்கள் நோன்பிருந்து
கரம்கூப்பி வணங்கித் தொழுவோம்.
பொருதவன் சிரம்கொய்த துர்கா தேவியை
கருத்திலே நிறுத்திநவ நாட்கள் நோன்பிருந்து
கரம்கூப்பி வணங்கித் தொழுவோம்.
Now, the homeless demi-Gods roamed on
earth like ordinary humans as they had nowhere to go. The demi-Gods spoke of
how they were now counting on the Holy Trinity to save them from this misery.
Listening to the anguish of the demi-Gods, the bearer of discus – Lord Vishnu –
emitted a divine light. Similarly, Brahma, Shiva and Indra emanated divine
light that combined to form a huge mountain of great energy.
The demi-gods were amazed at the
flames of that energy being discharged in all the four directions. That mass of
energy was unmatchable in the three worlds and in no time it got converted into
a woman. Her face was formed as a result of Shiva’s divine light. Yamraj’s (God
of death) divine energy gave her long, lustrous hair. Vishnu’s almighty energy
formed her powerful arms. Her breasts were formed as a result of the Moon God’s
power. Varun’s might made her thighs and calf muscles while the Earth formed her
buttocks. Her feet were shaped when Bramha blessed her with his divinity and
the Sun’s ability transformed into the fingers of her feet. The Vasus shaped
the fingers of her hands and Kuber’s prowess patterned her nasal passage. Agni
or the Fire God’s vigour translated in the three eyes of the devi, while
Prajapati’s efficiency took the shape of her teeth. Thus, the great Goddess
Durga came into being.
Now was the turn of every God to
bestow her with divine gifts and weapons. In the process, Shiva gave away a
trident to her while Vishnu gave her a discus similar to the one he possesses.
Varun or the Rain God gave her a conch shell, the Fire God gave her power, the
Wind God presented her with bow and arrows, Indra offered his thunderbolt and
the bell taken off from the mighty Airawat elephant. Yamraj rendered kaldand,
Varun gave a Pash (noose), Prajapati gifted her Sphatik (snow rock crystal)
necklace and Bramha handed out a kamandalu (oblong water pot made of a dry
gourd (pumpkin) or coconut shell, metal, wood of the Kamandalataru tree, or
from clay, usually with a handle and sometimes with a spout.) The Sun God
filled the pores of her skin with his life-giving rays and Kaal (time) gifted
her shining sword and armour. The Ocean of Milk gifted her beautiful necklace
of pearls, lovely finger rings, bangles, earrings, hair accessories and clothes
that would remain resplendent.
Vishwakarma
gave a Farsa, various other weapons and a garland made of forever fresh Lotus
flowers. Jaldhi presented her with a beautiful Lotus flower. The King of
mountains - Himalaya – gave her a Lion which became her vehicle, and also
bestowed on her a number of rare gemstones. Kuber – the God of Wealth – offered
the Great Goddess - a pot full of honey. And last but not the least, the
Serpent King - Sheshnaag – gifted her naaghaar (serpent necklace) studded with
precious gemstones. Such are the endowments of Durga.
Sent
from Windows Mail
Wanted to share the Ramayanam brilliantly written in Tamil
ReplyDeleteஅகரத்தில் ஓர் இராமாயணம்
இராமாயண கதை முழுதும்
'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால்
அனந்தனே
அசுரர்களை
அழித்து,
அன்பர்களுக்கு
அருள
அயோத்தி
அரசனாக
அவதரித்தான்.
அப்போது
அரிக்கு
அரணாக
அரசனின்
அம்சமாக
அனுமனும்
அவதரித்ததாக
அறிகிறோம்.
அன்று
அஞ்சனை
அவனிக்கு
அளித்த
அன்பளிப்பு
அல்லவா
அனுமன்?
அவனே
அறிவழகன்,
அன்பழகன்,
அன்பர்களை
அரவணைத்து
அருளும்
அருட்செல்வன்!
அயோத்தி
அடலேறு,
அம்மிதிலை
அரசவையில்
அரசனின்
அரியவில்லை
அடக்கி,
அன்பும்
அடக்கமும்
அங்கங்களாக
அமைந்த
அழகியை
அடைந்தான் .
அரியணையில்
அமரும்
அருகதை
அண்ணனாகிய
அனந்தராமனுக்கே!
அப்படியிருக்க
அந்தோ !
அக்கைகேயி
அசூயையால்
அயோத்தி
அரசனுக்கும்
அடங்காமல்
அநியாயமாக
அவனை
அரண்யத்துக்கு
அனுப்பினாள்.
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அந்த
அடியார்களில்
அருகதையுள்ள
அன்பனை
அரசனாக
அரியணையில்
அமர்த்தினர்.
அடுத்து
அன்னைக்காக
அவ்வானரர்
அனைவரும்
அவனியில்
அங்குமிங்கும்
அலைந்தனர்,
அலசினர்.
அனுமன்,
அலைகடலை
அலட்சியமாக
அடியெடுத்து
அளந்து
அக்கரையை
அடைந்தான்.
அசோகமரத்தின்
அடியில் ,
அரக்கிகள்
அயர்ந்திருக்க
அன்னையை
அடிபணிந்து
அண்ணலின்
அடையாளமாகிய
அக்கணையாழியை
அவளிடம்
அளித்தான்
அன்னை
அனுபவித்த
அளவற்ற
அவதிகள்
அநேகமாக
அணைந்தன.
அன்னையின்
அன்பையும்
அருளாசியையும்
அக்கணமே
அடைந்தான்
அனுமன்.
அடுத்து,
அரக்கர்களை
அலறடித்து ,
அவர்களின்
அரண்களை ,
அகந்தைகளை
அடியோடு
அக்கினியால்
அழித்த
அனுமனின்
அட்டகாசம் ,
அசாத்தியமான
அதிசாகசம்.
அனந்தராமன்
அலைகடலின்
அதிபதியை
அடக்கி ,
அதிசயமான
அணையை
அமைத்து,
அக்கரையை
அடைந்தான்.
அரக்கன்
அத்தசமுகனை
அமரில்
அயனின்
அஸ்திரத்தால்
அழித்தான்.
அக்கினியில்
அயராமல்
அர்பணித்த
அன்னை
அவள்
அதி
அற்புதமாய்
அண்ணலை
அடைந்தாள்.
அன்னையுடன்
அயோத்தியை
அடைந்து
அரியணையில்
அமர்ந்து
அருளினான்
அண்ணல் .
அனந்தராமனின்
அவதார
அருங்கதை
அகரத்திலேய
அடுக்கடுக்காக
அமைந்ததும்
அனுமனின்
அருளாலே
Modern day Thirukkural on Cell Phone
ReplyDeleteஸ்மார்ட்போன் திருக்குறள்....!!!
செல்போனில் சூப்பர்போன் ஸ்மார்ட்போன், அப்போன்
செல்போனில் எல்லாம் தலை...
தந்தை மகற்காற்றும் நன்றி, சேம்சங்கில்
ஸ்மார்ட்போன் வாங்கித் தரல்...
மகன் தந்தைக்காற்றும் உதவி, அப்பாமுன்
செல்போனை நோண்டாதிருத்தல்...
2G யினால் ஸ்லோவாகும் டேட்டா, ஆகாதே
3G யில் போட்ட டேட்டா...
உடுக்கை இழந்தவன் கைபோல, ஆங்கே
இடுக்கண் களைவதாம் சார்ஜர்...
பட்டனைத் தடவும் மணற்கேணி, மாந்தர்க்கு
டச்ஸ்க்ரீன் தூறும் அறிவு...
முகநக நட்பது நட்பன்று, வாட்ஸப்பில்
அகநக நட்பது நட்பு...
மிஸ்டு கால் செய்தாரை ஒருத்தல், அவர் நாண
கால் செய்து பேசி விடல்...
ரேட் கட்டரோடு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லாம்
பில் கட்டியே சாவார்
ஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது
ReplyDelete========
ஆண் என்பவன்...
கடவுளின் உன்னதமான படைப்பு
சகோதரிகளுக்காக, இனிப்புகளை தியாகம் செய்பவன்
பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளை தியாகம் செய்பவன்
காதலிக்கு பரிசளிக்க, தன் பர்ஸை காலி செய்பவன்
மனைவி குழந்தைகளுக்காக , தன் இளமையை அடகுவைத்து அலட்டிக்கொள்ளாமல் அயராது உழைப்பவன்
எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு, அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் லோ லோ என்று அலைபவன்
இந்த போராட்டங்களுக்கு இடையில், மனைவி-தாய்-முதலாளிகளின் திட்டுகளை வாங்கி, தாங்கிக்கொண்டே ஓடுபவன்
அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன்
அவன் வெளியில் சுற்றினால், 'உதவாக்கரை' என்போம்
வீட்டிலேயே இருந்தால், 'சோம்பேறி' என்போம்
குழந்தைகளை கண்டித்தால், 'கோபக்காரன்' என்போம், கண்டிக்கவில்லை எனில், 'பொறுப்பற்றவன்' என்போம்
மனைவியை வேலைக்கு செல்ல, அனுமதிக்காவிடில் 'நம்பிக்கையற்றவன்' என்போம், அனுமதித்தால் 'பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்' என்போம்
தாய் சொல்வதை கேட்டால், 'அம்மா பையன்' என்போம்; மனைவி சொல்வதை கேட்டால், 'பொண்டாட்டி தாசன்' என்போம்
ஆண்களின் உலகம், தியாகங்களாலும் வியர்வையாலும் சூழப்பட்டது.
இதனை பகிர்ந்து, ஆண்களுக்கு புன்னகையையும் பெண்களுக்கு புரிதலையும், ஏற்படுத்தலாம்...