என்னுடைய முதல் பதிவை ஆனைமுகனுக்கு ஒரு விண்ணப்பத்துடன் ஆரம்பிக்கிறேன்.
குறிப்பு:
1. யானை முகம் கொண்ட கஜமுகாசுரன் என்ற அரக்கனைக் கொன்று அவனைத் தன் வாகனமாக மாற்றிய கதையைக் குறிக்கும்.
2. பார்வதியின் உத்தரவின்படி வாயிலைக் காத்துக்கொண்டு இருந்த சிறுவனான விநாயகர் ,சிவபெருமானையே உள்ளே விட மறுத்ததால் சினம் கொண்ட சிவன் , அச் சிறுவன் தன் மகன்தான் என்று உணராமல் ,அவரது தலையைக் கொய்து எறிந்தார்! பின்னர் ஒரு யானையின் தலை அவருடைய உடலுடன் இன்னைக்கப்பட்டது என்பது வரலாறு. இது ஒரு கதைச் சுருக்கமே! விரிவான கதையை அறிய வேண்டுவோர் இணையதளத்தின் இன்னைப்புகளை அணுகவும்.
இடைத் தொடர்ந்து அடுத்து வரும் பதிவுகளில் , அவர் மீது தொடுக்கப்பட ஒரு பதிகத்தை பதிப்பேன்.
அன்புடன்
ரமேஷ்
13-8-2015
கவி வணக்கம்
மதங்கொண்ட
களிர்முகத் தரக்கனைப் பொருதிட்டு
வதம்செய் தவன்மீத
மர்ந்தவா ---- நிதமுமே
பணிந்துன்னைப் பண்பாடி பைந்தமிழில் வாழ்த்தவே
முனைந்தே புனைந்தேனோர் பாடல் 1
அரன்அரிந்த
சிரம்விடுத்து கரிமுகம் தரித்தவனை
பரம்பொருளும்
கரம்குவித்து வணங்குமே ---- கரமைந்து
பெற்றவனை வணங்கிநான் வேண்டிடும் வரமொன்று
நற்றமிழ்க்
கவிதைத் திறம் . 2
அன்புடன்
ரமேஷ்
13-8-2015
வருக, வருக, வணக்கம் .
ReplyDeleteதங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் .
துங்கக் கரிமுகத்துத் தூமணி மேல் பாடப்பட்டுள்ள தங்களுடைய வெண்பா மிகவும் அருமையாக வுள்ளது. அதிலும் இரண்டு வெண்பாக்களிலும் ஒவ்வொரு கதையையும் பினைத்துள்ளீர்கள் . அதுவும் ஒரு கை தேர்ந்த புலவர் போல படைத்துள்ளீர்கள்.
மிக்க நன்று.
வாழ்த்துக்கள். தங்களது படைப்புகளை எதிர் நோக்கி காத்திருக்கிறேன் .
அன்புடன்,
எஸ். வெங்கடேசன்
தங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களது படைப்புகளை எதிர் நோக்கி காத்திருக்கிறேன் .
அன்புடன்,
Na.Rammohan