இரண்டு கவிதைகள் - லிமெரிக் வடிவில்
சென்ற சில பதிவுகள் சற்று ஆழமான கருத்தமைப்பைக் கொண்டிருந்தன. அவைகளுக்கு முற்றும் மாறுபாட்ட வகையில், லிமெரிக் என்னும் ஒரு குறும்பு வகை சார்ந்த படைப்பை இந்தப் பதிவில் கொடுக்கிறேன்.
இது ஒரு ஆங்கிலக் கவிதை அமைப்பு. ஒரு ஐந்தடிப் படைப்பு.
1,2 மற்றும் 5-ம் அடிகளின் ஈற்றுச் சீர் ஒரே சந்தத்துடன் இருக்கும்.
அது போல் 3,4 ம் வரிகளின் ஈற்றுச் சீரும் ஒரே சந்தத்தைப் பெற்றிருக்கும். 1.2 மற்றும் 5 ம் அடிகளை விட இந்த அடிகள் சிறியதாக இருக்கும்.
பொதுவாக இவை குறும்புக் கவிதைகளாக அமைத்திருக்கும். ஹாஸ்ய ரசம் ததும்பும்.
அது போல் 3,4 ம் வரிகளின் ஈற்றுச் சீரும் ஒரே சந்தத்தைப் பெற்றிருக்கும். 1.2 மற்றும் 5 ம் அடிகளை விட இந்த அடிகள் சிறியதாக இருக்கும்.
பொதுவாக இவை குறும்புக் கவிதைகளாக அமைத்திருக்கும். ஹாஸ்ய ரசம் ததும்பும்.
இப்போது இந்த இலக்கணத் திற்கு உட்பட்டு இரண்டு தமிழ் "லிமெரிக்"குகள்.
முதலாவது , இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனாவின் அதிரடி ஆட்டத்தைப் பாராட்டி.
இரண்டாவது டொனால்ட் டிரம்பின் தன்னிச்சையான வரிவிதிப்புகள் பற்றியது.
படித்தும், கேட்டும், சிரித்தும் மகிழலாம்!
அன்புடன்
ரமேஷ்
ஸ்மிரிதி மந்தனாவின் அதிரடி ஆட்டம்
மகளிர் கிரிக்கெட்டின் முதலாவது ஆளு
அவர்கையில் இருப்பதுவோ மட்டை இல்லை வாளு
மந்தானா என்பதவர் பேரு
நிச்சயமாய் அடிப்பாரு நூறு
இல்லேன்னா இன்னான்னு எங்கிட்ட கேளு!.
டொனால்ட் டிரம்பின் வரிகள்
அமெரிக்க நாட்டதிபர் டிரம்பு
அவர்தலையில் முளைச்சிருக்கோர் கொம்பு?
தன்னிச்சை போலே
பலநாடுகள் மேலே
வரிபோட்டு வரவழைத்தார் வம்பு
பசு மாட்டின் கொம்பில் கறக்க வந்த ட்ரம்பிற்கு
ReplyDeleteஇந்நதியாவில் கிடைக்க விருப்பதோ ஆப்பு.
Nice
ReplyDeleteAbsolutely refreshing limerick which brings out a smile.Great efforts.Let the smiles become laughter.
ReplyDeleteHumorous and interesting! Nice.
ReplyDeleteRefreshing indeed,to see these limericks in Tamil, not frequent these days
ReplyDeleteவெற்று வேடிக்கை பாட்டு
ReplyDeleteஎன்று கூகிள் தமிழில் அர்த்தம்( வடமொழிச்சொல்லோ) சொல்கிறது!
வெற்றில்லை! ஸ்மிரிதிக்கும்
டிரம்புக்கு ம் முடிச்சு போட்டு விட்டாயே!
வித்தியாசமான நான் அறிந்திராத ஒரு படைப்பு. எப்படி இருக்க வேண்டும் என தெளிவாகக் கொடுத்தமைக்கு நன்றி. இரண்டு படைப்பும் சிறப்பு.
ReplyDeleteவித்தியாசமான கேள்விப்படாத ஒரு அமைப்பு. விளக்கமாக கூறியதற்கு நன்றி. இரண்டு படைப்பும் அருமை.
ReplyDelete6.05 க்கு பதிவிட்டதும் நானே.
ReplyDeleteNice to read the Tamil limericks. Especially the Trump one!
ReplyDeleteNice poem sir
ReplyDelete