தொலையும் தூய்மை
படைப்பு தூய்மையாக இருந்தாலும் , அந்தத் தூய்மைத் தன்மை , வெளியுலத்துடன் தொடர்பு கொள்ளும் போது, சிதைவடைந்துவிடுகிறது! மூலத்திலிருந்து பிரிவது , எப்போதும் தூய்மையின் இழப்பிற்கு வழி வகுக்குமோ?
அன்புடன்
ரமேஷ்
முகில்விடும் மழைத்துளி தரைவிழும் வரைதான்
தெரியும் அதன்தன் தனித்துவம்
தரைதொட்ட உடனே கரைபல கலந்து
அதுதன் தூய்மையைத் துறந்திடும்
கருவிட்ட உயிர்த்துளி தரைதொடும் வரைதான்
நிலைத்திடும் அதனது நிர்மலம்
உருப்பெற்று உலகுடன் கசடுறக் கலந்தபின்
தொலைந்திடும் அதனது நற்குணம்
காற்றினில் மிதக்கும் அழகிய சிறகுகள்
தரையில் விழுந்ததும் குப்பைகளே
தோற்றம் மாறா திருப்பினும் மாற்றம்
பார்ப்பவர் மனதினில் விளைந்திடும்
தோன்றிய உடனே எல்லாப் பொருளும்
தூய்மையில் தோய்ந்து துலங்கிடுமோ?
தாய்மையை விட்டவை விலகிய உடனே
தூய்மையும் தேய்ந்தே மாய்ந்துடுமோ?
Composed with great thoughtfulness,One of the best poems I have ever read.
ReplyDeleteThanks A Lot, Swanthira Kumar. Great to hear from you.
DeleteNot Anonymous Swathanthira Kumar
ReplyDeleteதூய்மை இறைவன் மட்டுமே.மற்றதெல்லாம் களங்கபட்டதே என்பதை அருமையாக சொன்னாய் ரமேஷ்......ராஜன் பாபு.
ReplyDeleteபாராட்டுக்கு மிக்க நன்றி, ராஜன் பாபு. உங்கள் போன்றோரின் பாராட்டு என்னை இன்னும் எழுத ஊக்குவிக்கிறது.
DeleteExcellent . Expression of your Deep Thoughts
ReplyDeleteThanks. Nowadays I seem to be writing more on Philosophical things!
Deleteஅருமையான கவிதை. களங்கம் இன்றி பிறந்து, கரைகள் பல கலந்து தூய்மையை தேடுவதுதானே வாழ்க்கை? கிருஷ்ணமூர்த்தி
ReplyDeleteபாராட்டுக்கு மிக்க நன்றி, கிருஷ்ணமூர்த்தி. உங்கள் போன்றோரின் பாராட்டு என்னை இன்னும் எழுத ஊக்குவிக்கிறது. (பி.கு: எந்த கிருஷ்ணமூர்த்தி? SPIC? )
DeleteVery philosophical...nice.
ReplyDeleteThanks. Nowadays I seem to be writing more on Philosophical things! btw. why dont you add your name after the comments? Now you appear as "Annonymous"!
DeleteClassic
ReplyDeleteThnaks a Lot Sundar! Your appreciation means so much to me!
ReplyDelete