Search This Blog

Sep 4, 2025

அமைதிப் பள்ளத்தாக்கில்....

அமைதிப் பள்ளத்தாக்கில்......


"அமைதிப் பள்ளத்தாக்கில்" அமர்ந்து எழுதிய ஒரு பாடல்! 

அன்புடன் 

ரமேஷ்.



எண்ணக் குவியல்களின் இரைச்சல்களைத் துறந்து 

அண்ட வெளிபரப்பின்  ஆழத்திற் குள்பறந்து 

அமைதிப்  பள்ளத்தாக்கில்    தனியாகவே    அமர்ந்து  

இமைமூடி எண்ணத்தின்  சுமையிறக்கி சுவாசிக்கிறேன்


மவுனமெனும் மொழியில்நான் எழுதியபல  கவிதைகளையென் 

செவிமட்டும் கேட்டுணர ரகசியமாய் வாசிக்கிறேன்

இயற்கையின் இடையமர்ந்து  மோனநிலை மடியமர்ந்து 

தனிமைதரும் இனிமையினை  நானுணர்ந்து  நேசிக்கிறேன் 

  

கண்மூடித்  தவமிருந்து என்னையே  நான்திறந்து 

இப்பிறவியின் காரணமே  என்னவென யோசிக்கிறேன்

ஒளிவளிவெளி நிலம்நீரை  எண்ணற்ற உயிரினத்தை 

படைத்தும் காத்தும் அழிக்கும் இறைவனைநான் பூசிக்கிறேன் 


என்னுள்ளே யேயிறைவன் இருக்கின்றான் என்றாலோ  

கண்டுணரும் வரத்தையவன்  வழங்கிடவே யாசிக்கிறேன்


அன்புடன்

ரமேஷ் 



  




முத்தமிட முகில்தொட்டு நீண்டுயர்ந்த மலைநடுவில் 

சத்தங்கள்  என்றென்றும் சேராத தானதொரு 


24 comments:

  1. கூடிய விரைவில் உனது கவிதைத் தொகுப்புகளை
    புத்தக வடிவில் கண்டு, மீண்டும் படித்து, தமிழ்க்கவிதை ரசிகர்கள்
    அனைவரும் படித்து இன்புற
    விழைகிறேன். கோ. ரா

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி, ராம்கி! கனித்தோட்டத்தில் பதிவிட்ட பாடல்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து பதிவிடலாம் என்று எண்ணம். செயல்படுத்த இன்னும் நேரம் வரவில்லை!

      Delete
  2. உன் கவிதை தொகுப்புகளில் அனைத்து ரசங்களையும் அனுபவித்து வியந்து வாழ்த்த விழைகிறேன்.அருமை

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி, நண்பரே!

      Delete
  3. கற்பனையும் கவித்துவமும் அருமை.தமிழ் உங்களோடு நட்புடன் இருக்க, நீங்கள் தங்கத் தமிழில் தமிழின் பெருமை மிளிர பதிவு செய்கிறீர்கள்!வாழுகிறோம்!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி, நண்பரே!

      Delete
  4. புத்தக வடிவில் விரைவில் எதிர் பார்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி சுதந்திரகுமார்! கனித்தோட்டத்தில் பதிவிட்ட பாடல்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து பதிவிடலாம் என்று எண்ணம். செயல்படுத்த இன்னும் நேரம் வரவில்லை!

      Delete
  5. Swathanthira Kumar

    ReplyDelete
  6. இது என்னப்பா கவிதையா காட்டாறா?இல்லை மழை முகிலா?நல்ல கற்பனை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. Very nice Ramesh. I felt that I was also admiring the nature. Long live your beautiful imagination.

    ReplyDelete
  8. பள்ளத்தாக்கு உங்க உள்ளத்தை மிகவும் ஆழ்ந்து தாக்கியதாக தெரிகிறது. ஆராய்ந்து பார்த்தால், மலை உச்சியில் அமர்ந்து இருக்கும் அந்த சிவ பெருமானுக்கு இந்த மண்ணுலகமே ஒரு பள்ளத்தாக்கு தானே ? இரு கண்கள் இருக்கும் போதே இந்த மண்ணுலகத்தின் அழகை காண வேண்டாமோ?🙏

    அன்புள்ள
    வெங்கட்

    ReplyDelete
    Replies
    1. சிவபெருமான் பள்ளத்தாக்கை இரண்டு கண்களால் பார்த்தால் போதும்! மூன்றாம் கண்ணால் பார்க்காமல் இருந்தால் சரி!

      Delete
  9. தனிமையில் நானமர்ந்து
    உனது எண்ணக் குவியல்களை
    உரக்க வாசித்தேன்! தேனமுது!
    ஐயன் பெருமாள் கோனாரின்
    மாணவன் நான்! நீ எப்படி
    வாசித்து மகிழ்ந்தாயோ,
    அப்படியே, அடியேன்
    மகிழ்ந்தேன்! தற்பொழுது
    ரா. கோ

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி, ராம்கி! ( ரா.கோ?கோ.ரா?)

      Delete
  10. really super sir, Regards GRC

    ReplyDelete
  11. Beautiful poem. Yes one has to be gifted to enjoy nature in solitude. The lines truly reflect my love for nature. Congratulations for coming up with such beautiful poems👍

    ReplyDelete
  12. அமைதி பள்ளத்தாக்கு ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டியுள்ளது. எங்கும், எதிலும்,நம்முள்ளும் இறைவனைக் காண்பதே வாழ்வின் உன்னதம்.

    ReplyDelete
  13. பாராட்டுக்கு மிக்க நன்றி, சங்கரலிங்கம்!

    ReplyDelete