Search This Blog

Aug 15, 2025

சுதந்திர தின வாழ்த்துகள்

 சுதந்திர தின வாழ்த்துகள் 




மதமினம் பற்பல   மொழிகள் என்றும் 

----வடகுட குணதென்* திசைகள் என்றும்

விதவித வெவ்வெவ் வேறு பிரிவுகள் 

----பலவு மிருந்தும்  அனைவரும் ஒன்றாய் 

இதந்தரும் இனியவிச் சுதந்திர நாளில் 

----இணைந்து  பாரதத் தாயினைப் போற்றி 

சதம்பல யுகம்** இனும் சிதறுதல் இன்றி 

----சிறப்புடன் இருந்திட வாழ்த்துகள் சொல்வோம் .


எல்லைக்  கோட்டின் இருபுறங் களிலும்   

----தொல்லை யளிக்கும் தெருநறை ^ அழிக்கும்  

      ----வல்லமை பெற்றவள் விளங்கிட வாழ்த்து! 

வரம்புகள் மீறி வம்புகள் செய்யும்   

---- டிரம்பின் காப்பு வரிகளை*** எதிர்த்து 

      ---- திறம்பட மாற்றுகள் கண்டிட வாழ்த்து 

நித்தம் நித்தம் புத்தம் புதிதாய் 

---- பற்பல தொழில்வகை  வித்துகள் விதைத்து 

    ---- இந்திய இளைஞர் எழுந்திட வாழ்த்து 

சிறுதொழில் செய்வோர் சிறந்திட வாழ்த்து 

-----பெருந்தொழில் செய்வோர் பெருகிட வாழ்த்து 

     ----உழவுத் தொழிலோர் உயர்ந்திட  வாழ்த்து

மொத்த உள்நாட்டு ஆக்கத்  திறனை# 

----மெத்த உயர்த்தி மூன்றாண்டுகளில் 

    ----மூன்றாம் இடத்தைப் பிடித்திட வாழ்த்து 


அன்புடன் 

ரமேஷ் 


^ தெருநர் = பகைவர் 

* வடகுட குணதென் = North India, Western India, Eastern India and South India divisions

**  சதம் பல யுகம் = பல சத  யுகங்கள் என்று படித்தறிக 

*** காப்பு வரிகள் = tariffs

# உள்நாட்டு ஆக்கத்  திறன் =  GDP




20 comments:

  1. கவிதை அருமை.
    மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றினால், நாம் நினைப்பது நடக்கும். பொருளாதார வளர்ச்சியில் இடம் நான்கி லிருந்து இடம் மூன்றுக்கு முன்னேற்றம் கண்டிடுவோம், குறுகிய மூன்றாண்டுகளில்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, நண்பரே!

      Delete
  2. ஆஹா என்ன பாரத தாய் பாசமுள்ள குறுந்தொகை , இன்ப தேன் வந்து பாயுது காதினிலே...காழ்பு உணர்ச்சி இல்லாமல் காய்ப்பு வரி கட்டுவோம்..ஏனால் கப்பம் கட்டி கைகட்டி இருந்த காலம் எல்லாமே போயாச்சே! வெங்கட்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, நண்பரே!

      Delete
  3. அருமையான படைப்பு.பொருப்பற்ற உள்ளூர் தேசவிரோத எண்ணங்கள் மாறவும் போற்றுவோம்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி, நண்பரே!

      Delete
  4. Well covered kavithai. Vazhthukkal.

    ReplyDelete
  5. அருமையான படைப்பு ரமேஷ்!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி, நண்பரே!

      Delete
  6. இந்திய மூத்த குடிமக்கள் நலத்துடன் வாழ்ந்திட, வாழ்த்து!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, நண்பரே!

      Delete
  7. Very nice. Need of the hour 👍

    ReplyDelete
  8. Replies
    1. மிக்க நன்றி, நண்பரே!

      Delete
  9. Replies
    1. மிக்க நன்றி, நண்பரே!

      Delete