Search This Blog

Feb 11, 2025

நண்பன் முரளிக்கு வாழ்த்து

நண்பன் முரளிக்கு வாழ்த்து 


கோவை அரசினர் பொறியியல் கல்லூரியின் 1970 ஆண்டில் தேர்வுற்ற  மாணவர்களின் -  55வது ஆண்டு நிறைவுக் கூடல் மைசூர் நகரில் இம்மாதம் ஏழாம் தேதி முதல் பத்தாம் தேதி வரை நடைபெற்றது. அப்போது மிக அருமையாக அதை நிகழ்த்திய நண்பர் முரளியின் பல்வேறு பரிமாணங்களை அறிந்து வியந்தோம். அவர் தலைமையில், அவரது முழு ஈடுபாட்டுடன் இயங்கும் பல நிறுவனங்களை நேராகப்   பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.  அவரை வாழ்த்தி ஒரு சிறு பாடல் தொகுப்பு - வெண்டுறை வடிவில்!

அன்புடன் 

ரமேஷ் 





பட்டப் படிப்பு படித்ததொடு நிற்காமல் 

பட்டறிவும் கூடவே பெற்றதன் பயனாலே 

பட்டறைகள் பலநிறுவித் தொழில்துறையில் பேருயரம் 

எட்டியவென் நண்பனுக்கு வாழ்த்து 




படித்துப் பட்டங்கள்   பலரும்  பெற்றிடவே 

படிக்கல்லாய் அமைகின்ற கல்விக் கூடங்கள் 

நடத்தி வருகின்ற நண்பன் முரளிக்கு 

கடவுளருள் கிட்டிட வாழ்த்து 




பற்பல வருடங்கள் உழைத்துக் களைத்துப்பின்

தற்போது தனைத்தாங்கி  நிற்கின்ற தூணெதுவும்

இல்லா திருப்போர்க்கு இல்லங்கள்  அளிக்கும் 

நல்மனத்து நண்பனுக்கு வாழ்த்து.




  

   

17 comments:

  1. Nice one on Murali’s achievements. Kudos to Murali and you 👍.

    ReplyDelete
  2. அருமை அருமை மிக மிக அருமை

    ReplyDelete
  3. என் மனைவியும் மிகவும் ரசித்து மூன்று கவிதைக்கு மூன்று அருமை பதிவிடச் சொன்னார்கள்.

    ReplyDelete
  4. நண்பனின் நற்பணிகளை நற்பாவால் வாழ்த்திய நல்லவரே வாழ்க வளர்க.

    ReplyDelete
  5. அருமை அன்பரே. உள்ளங்கை நெல்லிக்கனி போல் கவிதையால் அசத்தி விட்டீரே! தங்கள் கவிதைத்திறன் ஓங்குக .

    ReplyDelete
  6. A appropriate way to thank Muralidhar and also bring out the great work he is doing

    ReplyDelete
  7. ' யாம் பெற்ற இன்பம்
    பெற்றிடவே இவ்வைய்யகம்'
    என்றெண்ணி வேண்டுரைவடிவில்
    வாழ்த்துரைத்த வெண்பா
    ரமேஷ்க்கு நன்றி. இராமதாசு.
    வேண்டுரை விளக்கம் தேவை!

    ReplyDelete
  8. அருமை!நண்பனின் உயர்நிலை, சமுதாயப் பணி வெகு சிறப்பு! கவிதை சொல்லும் நிஜக் கதை அருமை!

    ReplyDelete
  9. Great poem. Ramesh. The words reflect the grand qualities of Murali Bhagavat. Being the class mates at GCT during 1965 to 1970, participating in the 55th reunion, hosted by Muarali was indeed a proud moment. I met him after 55 years. Time flies but then time also stays still.

    ReplyDelete
  10. Great poem for a super intelligent man by a super intelligent man.long live both intelligents.

    ReplyDelete
  11. Beautifully penned!

    ReplyDelete
  12. 3 நாள் நிகழ்வுகளை மிகப் பொருத்தமாக உமக்கே உரிய கவிதை நயத்தில் அளித்ததற்கு நன்றி.

    ReplyDelete
  13. God bless Muralidharan Bhagavath.Thanks Ramesh for you for making known to us about Muralis charities activities....... Rajanbabu.

    ReplyDelete