வலியுடன் வாழக் கற்றுக்கொள்
சென்ற இரு மாதங்களாய் ஒன்றன் பின் ஒன்றாய் வந்து தாக்கி வலியால் அவதிப்படும் ஆற்றாமையில் எழுதிய ஒரு பாடல்.
அன்புடன்
ரமேஷ்
வலியுடன் வாழக் கற்றுக்கொள்
வயது எழுபதை எட்டிய பின்னர்
-----வலிபல வந்து நமை வாட்டும்
பயணத்தில் இறுதிப் பகுதியில் இருக்கையில்
-----பலவகை நோய்கள் நமைச் சேரும்
வலிகள் இல்லா வாழ்க்கை என்பது
வாய்ப்பது மிகமிகச் சிலருக்கே -
விதியை நினைத்து வலியைப் பொறுத்து
வலியுடன் வாழக் கற்றுக்கொள்
உடல்திடம் குறைந்து இடர்படும் நிலையும்
-----நிச்சயம் நேர்ந்திடும் முதியவர்க்கு - பல
இடங்களில் உடலினில் கடும்வலி கண்டிடும்
-----ஆண்டுகள் மிகப்பல ஆனவர்க்கு
தலைவலி கால்வலி கைவலி மெய்வலி
-----முதுகு வலியோடு மூட்டுவலி -எனப்
பலவகை வலிகள் ஒன்றன்பின் ஒன்றாய்
-----வரவே வரிசையில் காத்திருக்கும்
வலிகள் இல்லா வாழ்க்கை என்பது
வாய்ப்பது மிகமிகச் சிலருக்கே -
விதியை நினைத்து வலியைப் பொறுத்து
வலியுடன் வாழக் கற்றுக்கொள்
மருந்து மாத்திரை வேளை தவறாமல்
-----தினம்தினம் நாமே விழுங்கிடினும்
சிறந்த மருத்துவர் சொல்லும் அறிவுரை
-----கேட்டே நாளும் நடந்தபி(ன்)னும்
விரும்பி உ(ண்)ணும்பல உணவு வகைகளை
-----விலக்கி முற்றும் துறந்த பி(ன்)னும்
துரிதமாய் நம் வலிகளுக் கேயோர்
-----தீர்வு என்றும் வருவதில்லை
வலிகள் இல்லா வாழ்க்கை என்பது
வாய்ப்பது மிகமிகச் சிலருக்கே -
விதியை நினைத்து வலியைப் பொறுத்து
வலியுடன் வாழக் கற்றுக்கொள்
அருமையான கவிதை. வலி நிவாரண மருந்து, மாத்திரைகளுக்கு நிகராக, மனம் சீர் பெற இந்தக் கவிதை மாமருந்து ஆகும்!
ReplyDeleteபாராட்டுக்கு மிக்க நன்றி, Annonymous அவர்களே! தங்கள் பெயரையும் குறிப்பிட்டால் மகிழ்ச்சி அடைவேன்!
Deleteஅருமையான கவிதை. முற்றிலும் உண்மை.
ReplyDeleteநன்றி
அர.இராமச்சந்திரன்
பாராட்டுக்கு மிக்க நன்றி, ராமச்சந்திரன்!
Deleteநம் வயதினருக்கு மிகப் பொருத்தமான தலைப்பு. என்னை பொறுத்தமட்டில், மாத்திரைகளையும் முடிவில்லாத பரிசோதனைகளையும் தேடி அலைவதைவிட, நம்பகமான உடற்பயிர்ச்சியாளரை நாடுவதே நலம்.அப்படி ஒருவர் உதவியை நான் நாடுகிறேன்.
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி, சங்கர்! உடற்பயிற்சியாளர் உதவியுடன் முற்றும் நலம் பெற வாழ்த்துகிறேன்.
DeleteVery apt and timely ! No use complaining about pains. Digest all pains , painfully !
ReplyDeleteRamani.
Thanks Ramani. Yes, One must grin and Bear it.
DeleteVery True . We must learn to live with pain
ReplyDeleteYes SKM. No use cribbing! Grin and Bear it!
DeleteVery nicely reality brought out.Yes we must learn to live with it.
ReplyDeleteThanks ST. Yes, If it can not be cured, it must be endured.
ReplyDeleteஇடுக்கண் வருங்கால் நகுக.வள்ளுவருக்கும் வலி என்ற இடுக்கண் வந்திருக்க வேண்டும்.
ReplyDeleteBrilliant piece of advice! To learn to live with pain!
ReplyDeleteThe poem totally reflects my state of mind (and body). Do hope you will find total relief at the earliest. Sunder
ReplyDelete