அயோத்தியில் ராமர் கோயில்
நாளை அயோத்தியில் கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவிலில் பால ராமரின் சிலையை நிறுவவிருக்கும் நேரத்திலே, அந்நிகழ்வையொட்டி ஒரு பாடல்.
அன்புடன்
ரமேஷ்
வதையுண்டு போகாமல் பக்தர்கள் மனதிலே
விதையாக உயிர்வாழ்ந்து காவியமாய்க் கதைகளாய்
சிதையாமல் சிதறாமல் வேரூன்றி வளர்ந்ததே!
தவமிருந்து தசரதனும் கோசலையும் வேண்டிட
அவதரித்த அண்ணலுக்கு அவர்பிறந்த இடத்திலே
அயோத்திமா நகரிலே அழகுமிகு கோவிலில்
அவருடைய திருச்சிலையை நியாசம்*செய்யும் நாளிதே .
(*நியாசம்=consecration)
கோடிமக்கள் கூட்டமாக கூடிநின்று களித்திட
நாடுமுழுதும் வீடுதோறும் தீபமேற்றி மகிழ்ந்திட
பாடிப்பாடல் பாலராமன் புகழையெவரும் போற்றுவோம்
அன்புடன்
ரமேஷ்
நல்ல பதிவு. நன்றி
ReplyDeleteநன்றி, நண்பரே!
Deleteஅருமை!மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் அயோத்தி ராமன் புகழ் பாடி மகிழ்வோம்!
ReplyDeleteநன்றி, பெயரிட மறந்த நண்பரே!
Deleteமிக்க நன்று.
ReplyDeleteநன்றி, பெயரிட மறந்த நண்பரே!
Deleteஅயோத்தியைக்கு சென்று வந்த உணர்வு குட்டியது அன்பரே! 🙏🏼
ReplyDeleteநன்றி, பெயரிட மறந்த நண்பரே!
Deleteகிட்டியது
ReplyDeleteJai sri ram
ReplyDeleteJai Shree Ram
Deleteஅருமை!அண்ணல் இராமர் புகழ் நிலைத்தோங்கட்டும்! மக்கள் நலமுடன் வாழ்ந்திட, வணங்குவோம் அயோத்தி இராமர் அருள் வேண்டி!
ReplyDelete