செங்கதிர் பரப்பி சுடர்விடும் சூரியன்
தென்னரைக் கோளம் விட்டே விலகி
வடதிசை நோக்கி வருமின் நாளில்
செங்கல்கள் அடுக்கி செய்தவோர் அடுப்பில்
செந்தழல் வந்தெழச் சிறுவிறகெரித்து
மண்கலப் பானை மேல் மஞ்சளைச் சுற்றி
பெண்கள் கூடிக் குலவை எழுப்ப
வெல்லம் நெல்லரிசி பாலுடன் சேர்த்து
நல்சுவைப் பொங்கல் பொங்கிடச் செய்வோம்.
வெல்லம் நெல்லரிசி பாலுடன் சேர்த்து
நல்சுவைப் பொங்கல் பொங்கிடச் செய்வோம்.
உறவுகள் சிறந்து உள்ளங்கள் சிரிக்க
அறம்பல நிறைந்து அல்லவை அகல
நெறிமுறை தவறா அரசுகள் அமைய
இறைவனை இந்நாள் இறைஞ்சிப் பணிவோம்.
அறம்பல நிறைந்து அல்லவை அகல
நெறிமுறை தவறா அரசுகள் அமைய
இறைவனை இந்நாள் இறைஞ்சிப் பணிவோம்.
அன்புடன்
ரமேஷ்
புதுப் பொங்கல் போல் சிறப்பான வாழ்த்து மடல், தித்திக்கும் தேன் தமிழில்
ReplyDeleteதிக்கெட்டும் பரவட்டும்!
நன்றி, நண்பரே! யாரிடமிருந்து வந்தது என்று உங்கள் மடலில் குறிப்பிடப் படவில்லை. Annonymus என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. உங்கள் பெயரைக் குறிப்பிடவும்.
DeleteExcellent, Ramesh !
ReplyDeleteRVR
Thanks, Ramani.
Deleteதேன் பாய்ந்த உணர்வு உங்கள் கவிதை....
ReplyDeleteநன்றி, பெயரிட மறந்த நண்பரே!
Deleteகவிதை தமிழில் தேன் மட்டுமா சொட்டுகிறது....அமுதும் அல்லவா.வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி, ராம்கி!
Deleteசர்க்கரைப் பொங்கல் பால் பொங்கல் போன்றவற்றை விட இக்கவிதைப் பொங்கல் அல்லவா இன்னும் தித்திக்கிறது?N Krishnamoorthy
ReplyDeleteநன்றி, பெயரிட மறந்த நண்பரே!
ReplyDelete