Search This Blog

Jun 10, 2023

அறுவடை

அறுவடை 

இன்று உலக சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தினம். 

இதுவரை சுற்றுச் சூழலை பாதுகாக்க மறந்தும் மறுத்தும் வரும் நம் தலைமுறைகள் இனியேனும் திருந்துமா ? 

அன்புடன் 

ரமேஷ் 



அறுவடை 

விதையை  விதைத்து நெற்கதிர்  வளர்த்து 

அறுவடை செய்யும் உழவர் இடையே  

எதைநாம் விதைத்து அறுவடை செய்தோம் 

கதையிதைச் சொல்வேன் கேட்டுணர் வீரே!


ஆற்றுப் படுகையில் அரண்மனை கட்டி 

ஆறாத்  துயரை அறுவடை செய்தோம் 

சுகவாழ்வு பெறவே  சூழலை அழித்து 

நச்சுக் காற்றை அறுவடை செய்தோம்


காட்டு மரங்களை வெட்டி வீழ்த்தியே 

ஓசோன்  அடுக்கில்  ஓட்டைகள் செய்தோம்   

வாட்டும் வெப்பம் எங்கும் ஏற 

புவிசூ டாதலை அறுவடை செய்தோம்


ஆழ்துளைக் கிணறுகள் பலவும் அமைத்தே 

நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்தோம் 

ஆழிக்  கடலின் உவர்நீர்  உள்ளே   

உட்புகும் நிலையை அறுவடை செய்தோம் 


எதை விதைத்தோமோ அதையே மீண்டும் 

அறுவடை செய்வோம் அறிந்திடு வோமே !

அதைநாம்  உணர்ந்து அல்லன ஒறுத்து 

நற்செயல் செய்துநம்  பூமியைக் காப்போம்!



6 comments:

  1. Very well said Ramesh! As you sow so you reap! I think we dangerously moving close to apocalypse.

    ReplyDelete
  2. Good one Ramesh. Despite obvious and scary warnings from Nature, mankind is unable or unwilling to reduce the rampant exploitation of resources. We are being very unfair to the future generations :-(

    ReplyDelete
  3. அற்புதமான கருத்து மக்கள் இடையே மனதை உறுத்துகிற
    விழுப்பு உணர்ச்சியை விதைத்து விட்டீர்கள் ஆனால் அரசாங்கmo வருடா வருடம் நெற்பயிர் அறுவடை போதுதான் விழித்து கொள்கிறார் களே! அந்த பொறுப்பு இல்லாத அரசாங்கத்தை திருத்துவது விஞ்ஞான அறிவு படித்தவர்களின் உன்னது கடமை.

    ReplyDelete
  4. அற்புதமான கருத்து மக்கள் இடையே மனதை உறுத்துகிற
    விழுப்பு உணர்ச்சியை விதைத்து விட்டீர்கள் ஆனால் அரசாங்கmo வருடா வருடம் நெற்பயிர் அறுவடை போதுதான் விழித்து கொள்கிறார் களே! அந்த பொறுப்பு இல்லாத அரசாங்கத்தை திருத்துவது விஞ்ஞான அறிவு படித்தவர்களின் உன்னது கடமை.

    அன்புள்ள
    வெறுத்து போன Venkat

    ReplyDelete