Search This Blog

Jun 13, 2023

மாத்ரு பஞ்சகம்- பாடல்கள் - 1,2

மாத்ரு பஞ்சகம் பாடல்கள் - 1,2 

முற்றும் துறந்த துறவியெனினும் தாயெனும் உறவைத் துறப்பது அரிது! தன் தாயின் மறைவின் போது ஆதி சங்கரர் வருந்திப் பாடிய பாடல் தொகுப்பு மாத்ரு பஞ்சகம். மனதை உருக்கும் ஐந்து பாடல்கள் கொண்ட இந்தத் தொகுப்பின் முதலாம் பாடலை, தமிழ்க் கவிதை வடிவில், சென்ற ஆண்டு அன்னையர் தினத்தன்று பதிவிட்டிருந்தேன். அது என் தாய் உடல்நலம் குன்றி மருத்துவ மனையில் இருந்த நேரம்!

இன்று என் தாயின் நினவு நாள்.  

இந்த நாளன்று மாத்ரு பஞ்சகத்தின் முதலாம் பாடலுடன், இரண்டாம் பாடலையும்  கவிதை வடிவில், என் அன்னையை வணங்கிப்  பதிவிடுகிறேன். மற்ற மூன்று பாடல்களையும் வரும் நாட்களில் பதிப்பேன்.

அன்புடன் 

ரமேஷ் 


பாடல் 1

ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸ¨திஸமயே துர்வாரசூலவ்யதா
நைருச்யம் தநுசோஷணம் மலமயீ சய்யாச ஸாம்வத்ஸரீ I
ஏகஸ்யாபி நகர்பபார பரணக்லேசஸ்ய யஸ்ய க்ஷம :
தாதும் நிஷ்க்ருதிமுந்நதோsபி தநய:தஸ்யை ஜநன்யை நம:

தடுக்கமுடியாத பிரஸவ வேதனை ஒருபுறமிருக்க, வாய்க்கு ருசி இல்லாதிருத்தல், உடம்பு இளைத்தல், ஒரு வருஷகாலம் மல மூத்ரம் நிறைந்த படுக்கை ஆகியவையான கர்பகாலத்தில் பாரத்தைத் தாங்கிக்கொள்ளும் கஷ்டத்தில் ஒன்றையாவது தீர்க்க வளர்ந்த பிள்ளை முடியாதவனாகி விடுகிறானே! அக்கஷ்டங்களை தாங்கிக் கொள்ளும் தாயை என்னவென்று செல்ல? அந்த தாய்க்கு நமஸ்காரம்!

பெறுகையில் எனைநீ பெரும்பா டுற்றாய்  

கருவைச் சுமைக்கையில்   களைத்தாய் இளைத்தாய் 

சிறுமழ  லையாய்நான்  இருக்கையில் எந்தன் 

சிறுநீர் நனைத்த படுக்கையில் படுத்தாய்  

பெரிதாய் வளர்ந்துநான்   பெரும்புகழ் பெறினும் 

சிறிதும் என்னால் நீயுற்ற துயரை 

சரியீடு செய்தல்  அரிதினும் அரிதே !

குருகுலமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா
யதிஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை :I
குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம்
ஸபதி சரணயோஸ்தே மாதரஸ்து ப்ரணாம :II

ஹே தாயே! ஒரு சமயம் நான் படிக்கும் குருகுலம் வந்து கனவில், நான் ஸன்யாஸம் பூண்டதாக் கண்டு உறக்க அழுதாயே அப்பொழுது குருகுலம் முழுவதும் உன் எதிரில் அழுததே! உனது கால்களில் விழுந்து நமஸ்கரிக்கிறேன்!


குருகுலம் நான்செலும் தருணத்தி லோர்நாள் 

உறவுக ளறுத்துநான்   துறவு கொள்வதாய்  

உறக்கத்தில் கனவொன்று கண்டுளம் பதைத்து  

மறுநா ளேகுரு குலம்வந் தடைந்தாய்!  

உருகியே உதிரமுன் விழிவழி  வழிய 

சிறுவன் எனைநீ   இறுகவே  அணைத்தாய்  

பிறிதுள பலருமக் காட்சிகண் டழுதார்!

தரையிலே  விழுந்துனை வணங்குதல் அன்றி 

வேறென்   செய்வேன்?  சரணமுன் அடியே!. 




6 comments:

  1. Excellent Translation

    ReplyDelete
  2. Thanks. The translation into Tamil prose is not done by me. It is taken from kamakoti.org. But the tamil poem form is written by me.

    ReplyDelete
  3. 🙏🏼🙏🏼

    ReplyDelete
  4. Mother’s unadulterated affection captured very well 👍

    ReplyDelete
  5. இவ்வளவு உருக்கமான பாடலை ஆதி சங்கரர் சமஸ்கிருதத்தில் பாடி இருப்பதை மிக அற்புதமாக தமிழில் நீ கையாண்டிருப்பது அற்புதம். தொடர்வாய் நண்பா.

    ReplyDelete