இராம நவமிப் பாடல்
இன்று ராமநவமி ! ராமபிரானின் அருள் வேண்டி ஒரு பாடல்
அன்புடன்
ரமேஷ்
கானகம் சென்றுதன் தந்தைசொல் காத்தானை,
வானரச் சேனைகளின் துணையோடு சமர்செய்து
தானவரைக்* கொன்றழித்து தருமத்தை நிலைநாட்டி *தானவர்=அரக்கர்
சானகனின்* திருமகளை சிறைமீட்டு வந்தானை, * சனகன்
வானகத் துறைதேவர் வணங்கித் தொழுவானை,
நானிலமும் போற்றவிந் நவமித் திருநாளில்
மானவனாய்* இந்த மண்ணில் பிறந்தானை, * மானவன்= மனிதன்
நானகத்திலே இருத்தி நவமியிந் நன்னாளில்
பானகமும் மோர்நீரும் படைத்தே பணிந்திடுவேன்
ஞானமெனை அடைந்து சேர.
Ramesh, Very elegant and simple poem of Ramayanam in a condensed form.
ReplyDeleteRamani.
Thanks Ramani
DeleteLovely! Complete Ramayanam in nutshell.
ReplyDeleteThanks, BV.
Deleteஎதுகையோடு விளையாடி விட்டாய்.அருமை.
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி, நண்பா!
Delete