பல்வேறு காரணங்களால் சிலமாதங்களாகத் தடைப்பட்டிருந்த என் கவிதைப் பயணத்தை,
நண்பர் ஒருவரின் உந்துதலால் மீண்டும் தொடங்குகிறேன், இந்த மாளய அமாவாசை தினத்தன்று!
அன்புடன்
ரமேஷ்
மஹாலய ( மாளய) அமாவாசை
வீற்றிருக்கும் முன்னோரை*
மண்வாழும் மாந்தரெலாம்
எண்ணத்திலே இருத்தி
எண்ணத்திலே இருத்தி
எண்ணீரை** அவர்க்குணவாய்
அளித்தின்று தொழுவாரேல்
அளித்தின்று தொழுவாரேல்
எண்ணற்ற பலன் பெறுவர்
என்றுமவர் ஆசியினால் !
என்றுமவர் ஆசியினால் !
* உயிர் பிரிந்தபின் விண்ணுலகம் ( சொர்க்கம் ) அடையுமுன், மூன்று தலைமுறை பித்ருக்கள்
பித்ருலோகத்தில் இருப்பர் என்பது ஐதீகம்.
** எள் + நீர் = எண்ணீர்
நேற்று தான் எள் நீர் பற்றிய தொகுப்பு ஒன்று கேட்டேன். கவிதைக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி, சங்கரலிங்கம்!
Deleteகண்ணீருடன் வழியனுப்பி வைத்தவரை
ReplyDeleteஎண்ணீருடன் எமை காக்க வேண்டிய பின்
ஒரு மாதம் என அவரும் நம்முடன் இருந்தே
ஒளி காட்டி அனுப்புவோம் கார்த்திகையிலே.
கருத்துக்கு மிக்க நன்றி!
Deleteநம் முன்னோர்கள் சிலை கேட்பதில்லை. !!
ReplyDeleteமாலை மரியாதையும் கேட்பதில்லை. !!!
நினைவேந்தலும் கேட்பதில்லை. !!
மேதினியில் நம்மை உயிர் பரே !!
நம்மிடம் எள் நீர் கொண்டு.
மெத்தவும் உண்மை. "நினைவேந்தல்" என்ற சொல்லை புதிதாக அறிந்துகொண்டேன்! நன்றி!
Delete👌👌
ReplyDeleteThanks, KKR.
DeleteExcellent expression of the "spirit" of Mahalaya Amavasai
ReplyDeleteThanks, Aravind.
Deleteநல்ல பதிவு . வாழ்த்துக்கள் . தொடரட்டும் தங்கள் கவிதைகள்
ReplyDeleteநன்றி !
DeleteVery nicely penned sentiments 🙏🏿
ReplyDeleteநன்றி !
Deleteஎள்+நீர் =எண்ணீர் என்ற இலக்கணம் தெரிந்து கொண்டேன். கவிதை அருமை.வாழ்த்துக்கள்.
ReplyDeleteநண்பா, இது இலக்கணப்படி சரியா எனத் தெரியாது! எனக்கு சரியாக இருக்கும் எனத் தோன்றியது! எழுதிவிட்டேன்!
Deleteமீண்டும் ஒரு அருமையான கவிதை. பாராட்டுக்கள்.
ReplyDeleteThanks, NKM.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநீங்கள் "எண்ணீற்கள் " அதை வடித்து விட்டீர்கள் ஒரு கவிதையாக.
ReplyDeleteஇன்று உங்களுக்கு கவிதை மணர்கேனி போலே ஊருகிறது , எனக்கென்னவோ.....
I like your wordplay - usage of எண்ணீர்கள் as எண்ணிநீர்கள்.
Deleteஎல்லா அம்மாவாசையிலும் எண்ணீரை விடாட்டாலும் மஹாளய அம்மாவாசை ஒன்றிலாவது
ReplyDeleteகண்ணீர் மில்க எண்ணீறை வருடம் விடாமல் விட்டால் போதுமே, விண்ணப்பம் இன்றி விண்ணுலகம் நாம் செல்வதிர்க்கு!
அது ஒன்று தான் நானும் பண்ணுகிறேன் என்று நாணமின்றி சொல்லணுமா என்ன? !!
அன்புள்ள
சம்பந்தி வெங்கட்
கருத்திற்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி, வெங்கட். மாதந்தோறும் தர்பணம் செய்யாவிட்டாலும் மனதார ஆண்டுக்கு ஓர்முறை சமர்ப்பணம் செய்தலும் சிறப்பே!
DeleteExcellent sir..keep rocking
ReplyDeleteRamesh, Excellent Kavithai . Keep up the good work! Best wishes to you !
ReplyDeleteVery touching and emotional Kavidhai dedicated to our fathers and forefathers
ReplyDeleteN Krishnamurthy - Ex dura accounts