இன்று காலை "பிரிகேட் லேக் பிரண்ட் " வளாகத்தில் நண்பர் மதுசூதனுடன் பேசிக்கொண்டே நடக்கும்போது சில தெருநாய்களைக் கண்டு ஒதுங்கினேன்.அப்போது நண்பர் கூறினார் - " பயப்படத் தேவையில்லை! இவைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுவிட்டது" என்று. அதற்கு அடையாளமாக கழுத்திலே ஒரு பட்டை காணப்பட்டது. காது நுனியும் வெட்டப்பட்டு இருந்தது.
அப்போது எனக்குத் தோன்றியது - "சரி, இந்த அடையாளங்களோடு நாய்களைப் பார்த்தால் பயப்படத் தேவையில்லை. மனிதர்களையும் "இவர் எத்தகையவர்" என்று பார்த்தவுடனே கண்டுகொள்ள, இம்மாதிரியான அடையாளங்கள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?"
இக்கருத்து ஒரு கவிதை வடிவில்!
அன்புடன்
ரமேஷ்
தெரு நாய்கள்
தடுப்பூசி போடப் பட்டு
------தெருவிலே திரியும் நாயால்
நடப்போர்க்கு ஆபத் தொன்றும்
------நேர்ந்துவிட நியாயம் இல்லை
காதுநுனி வெட்டி இருந்து
------கழுத்திலே பட்டை இருந்தால்
ஏதுமந்த நாய்க ளாலே
------எவர்க்கும்கே டில்லை யென்றே .
பார்த்ததும் அறிந்து கொள்வோம்
------பயப்படத் தேவை இல்லை
அதுவேபோல் மனிதர் களையும்
------ பார்த்ததும் பகுத்து அறிந்து
தடுப்பூசி போடப் பட்டு
------தெருவிலே திரியும் நாயால்
நடப்போர்க்கு ஆபத் தொன்றும்
------நேர்ந்துவிட நியாயம் இல்லை
காதுநுனி வெட்டி இருந்து
------கழுத்திலே பட்டை இருந்தால்
ஏதுமந்த நாய்க ளாலே
------எவர்க்கும்கே டில்லை யென்றே .
பார்த்ததும் அறிந்து கொள்வோம்
------பயப்படத் தேவை இல்லை
அதுவேபோல் மனிதர் களையும்
------ பார்த்ததும் பகுத்து அறிந்து
இடரிவர் இழைப்பார் என்றால்
----- தொடர்பினை விலக்க வழிகள்
எதுவேனும் உண்டோ அறியேன்
-------மதிஞானம் உடையோர் உரைப்பீர் !
-------மதிஞானம் உடையோர் உரைப்பீர் !
Super
ReplyDeleteNice
ReplyDeleteVery nice
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஒருவர் மனது ஒன்பதைய்யா! அதில்
ReplyDeleteஒளிந்து கிடப்பது எண்பதைய்யா!!
Nice wish 👍
ReplyDeleteநாயை கண்டு பிடிக்க வழி உண்டு. மனிதனை கண்டு பிடிக்க முடியாதைய்யா.மனிதன் ஆறாவது அறிவைப் பயன் படுத்துவான்.
ReplyDeleteகவிஞர் பாடல் உதவிக்கு வருகிறது.
ReplyDeleteபோயும் போயும் மனிதனுக்கு இந்த புத்தியை கொடுத்தானே.
முழு பாடலும் ரமேஷஷுக்கு கை கொடுக்கிறது.