குறள் மேல்வைப்பு வெண்பா - 21
Restarting this series after a long, long gap. Hence I think a small recap on the format will be in order.
குறள் மேல்வைப்பு வெண்பா ( the Kural with a story )
The Kural this time depicts the plight of the ill advised Russian war against Ukraine.
Read on !
அன்புடன்
ரமேஷ்
திருக்குறள் 50-ம் அதிகாரத்தில் ( இடனறிதல்) வரும் குறள் இது.
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோ தொட்டல் அரிது.
இக்குறளின் பொருள் -
பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும், அப்பகைவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பே குறள் கொடுத்த இந்த அறிவுரை இன்றைக்கும் பொருந்தும் என்பதற்கு ரஷ்ய-உக்ரேனியப் போரின் இன்றைய நிலைமை ஒரு எடுத்துக்காட்டு.
இப்பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பு சுத்தானந்த பாரதியார் வார்த்தைகளில் :
இக்குறளை ஈற்றடிகளாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு பலவிகற்ப இன்னிசை வெண்பா இதோ!
உக்ரேன்மேல் போர்தொடுத்த ரஷ்யப் பெரும்படைகள்
திக்குமுக் காடுவதைக் காணுகிறோம் இன்று!
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோ தொட்டல் அரிது.
No comments:
Post a Comment