செய்திப் பரிமாற்றங்கள்
ஊரடைப்புத் தடைகளால் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத நிலையில் இடைவிடாமல் அவர்கள் செய்துகொள்ளும் குறுஞ்செய்திப் பரிமாற்றம் ஒன் உதவுகிறது. என்றாலும் நேருக்கு நேராக அவள் விழியால் செய்யும் செய்திப் பரிமாற்றத்திற்கு அவை இணையாகுமா?
மின்காந்த அலைமூலம் தொலைபேசிச் செய்திகளை
அன்பார்ந்த காதலியே, அன்றாடம் அனுப்புகிறாய் .
என்றாலும் அவையெல்லாம் நேர்நோக்கும் உன்காந்தக்
கண்பார்வைக் கில்லை இணை!
பின் குறிப்பு :
என்னுடைய நண்பர்கள் இருவர் - இராம. கி , என்.கிருஷ்ணமூர்த்தி - ஆகியோர் சொன்ன கருத்துக்களை ஏற்று சில மாறுதல்களைச் செய்திருக்கிறேன். ஆராய்ந்து கருத்துத் தெரிவித்தமைக்கு என் மனமார்ந்த நன்றி!
மின்காந்த வானலையில் உன்காதல் செய்திகளை
அன்பார்ந்த காதலியே, நாள்தோரும் நீபகிர்வாய்
என்றாலும் நேர்நோக்கும் உன்காந்தக் கண்பார்வைக்
குண்டோ யிணையிங்கே சொல்!
(பல விகற்ப இன்னிசை வெண்பா)
”அலைமூலம்” என்பதை ”அலையால்” என்று மாற்றினால் வெண்பாவின் தளை தட்டாது,
ReplyDelete4 இடங்களில் கலித்தளை வந்திருக்கிறது. இது வெண்டுறை அல்லது கலிப்பா வகையிலேயே அடங்கும்!
DeleteReliving younger days Ramesh!!!!
ReplyDelete”அன்றாடம் அனுப்புகிறாய்” என்பதிலும் தளை தட்டுகிறது. ”காய் முன் நேர்” கணக்கு வரவில்லை.
ReplyDeleteநன்றி, இராம.கி . 4 இடங்களில் கலித்தளை வந்திருக்கிறது. இது வெண்டுறை அல்லது கலிப்பா வகையிலேயே அடங்கும்!
Deleteஎன்னுடைய நண்பர்கள் இருவர் - இராம. கி , என்.கிருஷ்ணமூர்த்தி - ஆகியோர் சொன்ன கருத்துக்களை ஏற்று சில மாறுதல்களைச் செய்திருக்கிறேன். ஆராய்ந்து கருத்துத் தெரிவித்தமைக்கு என் மனமார்ந்த நன்றி!
Deleteமின்காந்த வானலையில் உன்காதல் செய்திகளை
அன்பார்ந்த காதலியே, நாள்தோரும் நீபகிர்வாய்
என்றாலும் நேர்நோக்கும் உன்காந்தக் கண்பார்வைக்
குண்டோ யிணையிங்கே சொல்! (பல விகற்ப இன்னிசை வெண்பா)
Super sir
ReplyDeleteகாந்த கண்கள் என்று கூறி
ReplyDeleteசொந்த்தமாக இருந்த என் கண்மணி காந்திமதியை பற்றின எண்ணங்களை கிளறி விட்டீர்களே! சாந்தமாக இருக்குமா என் நெஞ்சம்!!
வெங்கட்
Nice
ReplyDeleteBeautifully expressed the longing feeling of love ....
ReplyDeleteநண்பா
ReplyDeleteஇன்னும்GCT யில் இருப்பது போல் நினைப்போ!
பழைய வாசனை - பெருங்காய டப்பாவிலிருந்து!
ReplyDeleteபழைய வாசனை - பெருங்காய டப்பாவிலிருந்து!
ReplyDelete
ReplyDeleteரமேஷ்,
அருமை.அந்த வசந்த காலத்தை நினைவு கூர்ந்தீர்களோ?