Search This Blog

Dec 20, 2020

மார்கழி விடியல் - ஒரு மீள் பதிவு

 மார்கழி விடியல் - ஒரு மீள் பதிவு 

சென்ற ஆண்டு மார்கழி மாதம் எழுதிப்  பதித்த ஒரு பாடலை மீண்டும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி  அடைகிறேன்.

அன்புடன் 

ரமேஷ்


மார்கழி விடியல்





மார்கழித் திங்கள் நிறைபனிக் காலை
தேரில்  ஏறி வான்வழி உலவும்
சூரிய னொளிக்கதிர் தரைதொடும் நேரம்
ஊரெழு முன்தம் உறக்கம் விடுத்த
கூர்விழி  மாதர்தம் குடிலின் வாயிலில்
நீரைத் தெளித்து நிலத்தைக் கழுவி
அரைத்த அரிசி மாவை எடுத்து
விரலால் விரிமாக் கோலம் இட்டு
ஆவின் சாணம் அதனுள் வைத்து
பூசணிக் கொடியின் பூவைச் செருகி
திருப்பா வைகளின் பாசுர மிசைத்து
அறிதுயில் கொள்ளும் அரியை எழுப்ப

விடியும் இனியவோர்  காலைப்  பொழுது


7 comments:

  1. மிக மிக அருமை. உயிரற்ற அல்லது ஓரறிவு பொருட்கள் வைத்து நாராயணனை துயில் எழுப்பும் நம் ஆன்மீகத்தின் தாத்பரியத்தை புரிந்து கொண்டால் எல்லாம் சுபிட்சமே.

    ReplyDelete