இன்று வைகுண்ட ஏகாதசி!
இந்தப் புண்ணிய நாளில் திருமாலின் பத்து அவதாரங்களைப் பற்றி எழுதிய பத்து வெண்பாக்களை இறைவனின் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.
அன்புடன்
ரமேஷ்
மந்தார மாமலையை மத்தாக ஆக்கியே
இந்திர தேவ ரசுரர் - இணைந்துவெண்
பாற்கடலை யேகடைய அம்மலையைத் தாங்கினார்
கூர்மாவ தாரத் திலே.
தசாவதாரம்
மச்சாவதாரம்
ஆழ்கடலின் ஆழத்தில் நான்முகனின் நான்மறையை
ஆழ்த்தி மறைத்திட்ட அஸ்வமுக* தானவனை**
மீனினவ தாரத்தில் போரிட்டு மீட்டவன்
வானுரை வைகுண்ட னே
ஆழ்கடலின் ஆழத்தில் நான்முகனின் நான்மறையை
ஆழ்த்தி மறைத்திட்ட அஸ்வமுக* தானவனை**
மீனினவ தாரத்தில் போரிட்டு மீட்டவன்
வானுரை வைகுண்ட னே
இந்திர தேவ ரசுரர் - இணைந்துவெண்
பாற்கடலை யேகடைய அம்மலையைத் தாங்கினார்
கூர்மாவ தாரத் திலே.
( பல விகற்ப இன்னிசை வெண்பா )
மண்ணுலகை ஆழ்கடலில் ஆழ்த்திவைத்த ராட்சதனை
வெண்ணிறப் பன்றியின் ரூபத்தில் - கொன்றபின்
பூமியைத்தன் மூக்கிலே தாங்கியே மேற்கொணர்ந்த
*நேமியன் வாரா கனே ! (பல விகற்ப இன்னிசை வெண்பா )
*நேமியன் - உயர்ந்தவன்; நியமம் தவறாதவன்.
நரஸிம்ஹாவதாரம்
மானுடன் பாதியாய் *மாஅரியும் மீதியாய்
ஊனுடல் ரூபம் எடுத்து - இரணியனை
கொன்றுதன் பக்தனை பாலிக்க வேயெடுத்த
நான்காவ தாரப் பிறப்பு.
மூன்றடி மண்கேட்டு ஈரடியில் பாரளந்து
ராமாவதாரம்
பெற்றவன் சொல்காக்க கான்சென்று தன்னுடன்
உற்றவளை மீட்கவே வில்லேந்தி - தெற்காளும்
கொற்றவனைக் கொன்றவளை மீட்ட அவதாரம்
பொற்புடை ராமனுடைத் தே !
.
வராகஅவதாரம்
மண்ணுலகை ஆழ்கடலில் ஆழ்த்திவைத்த ராட்சதனை
வெண்ணிறப் பன்றியின் ரூபத்தில் - கொன்றபின்
பூமியைத்தன் மூக்கிலே தாங்கியே மேற்கொணர்ந்த
*நேமியன் வாரா கனே ! (பல விகற்ப இன்னிசை வெண்பா )
*நேமியன் - உயர்ந்தவன்; நியமம் தவறாதவன்.
நரஸிம்ஹாவதாரம்
மானுடன் பாதியாய் *மாஅரியும் மீதியாய்
ஊனுடல் ரூபம் எடுத்து - இரணியனை
கொன்றுதன் பக்தனை பாலிக்க வேயெடுத்த
நான்காவ தாரப் பிறப்பு.
(பல விகற்ப இன்னிசை வெண்பா)
*மாஅரி- அரிமா ; சிங்கம்
மூன்றடி மண்கேட்டு ஈரடியில் பாரளந்து
மூன்றா மடியூன்றி மன்னன் தலைகொண்டு
வாமனக் கோலத்தில் வந்தவத ரித்துலகை
சேமமுறச் செய்தமா யன். (பல விகற்ப இன்னிசை வெண்பா )
பரசுராமவதாரம்
பரசெனும் கோடரி ஆயுதம் ஏந்தி
அரசாளும் க்ஷத்ரிய வம்சத்தை கொன்றென்றும்
சாகா வரம்பெற்று சஞ்சீவி யாய்வாழும்
அரசாளும் க்ஷத்ரிய வம்சத்தை கொன்றென்றும்
சாகா வரம்பெற்று சஞ்சீவி யாய்வாழும்
ஏகாந்த ராமன் இவன். (பல விகற்ப இன்னிசை வெண்பா )
பெற்றவன் சொல்காக்க கான்சென்று தன்னுடன்
உற்றவளை மீட்கவே வில்லேந்தி - தெற்காளும்
கொற்றவனைக் கொன்றவளை மீட்ட அவதாரம்
பொற்புடை ராமனுடைத் தே !
( ஒரு விகற்ப நேரிசை வெண்பா )
பலராமாவதாரம்
ராமாவ தாரத்தில் சோதரனி லக்குவனாய்
*சாமத் திருமேனி அண்ணலுக்கு - நேமமாய்
செய்தபணிப் புண்ணியத்தால் கண்ணனுக்(கு) அண்ணனாய்
உய்த்தான் பலராம னாய் .
பலராமாவதாரம்
ராமாவ தாரத்தில் சோதரனி லக்குவனாய்
*சாமத் திருமேனி அண்ணலுக்கு - நேமமாய்
செய்தபணிப் புண்ணியத்தால் கண்ணனுக்(கு) அண்ணனாய்
உய்த்தான் பலராம னாய் .
( இரு விகற்ப நேரிசை வெண்பா )
* சாமம்- இரவு; சாமத் திருமேனி - இரவைப்போன்ற கருத்த நிறத்தவன்
* சாமம்- இரவு; சாமத் திருமேனி - இரவைப்போன்ற கருத்த நிறத்தவன்
*இருதாயைப் பெற்று **இருதாரம் ஏற்று
திரௌபதியைக் காக்க துகிலளித்து - அர்ச்சுனனின்
தேர்ஒட்டி போர்முடித்து கீதையெனும் நீதியை
பாருக் களித்தகண் ணன்.
(பல விகற்ப இன்னிசை வெண்பா )
*இருதாய் - பெற்ற தாய் தேவகி; வளர்த்த தாய் யசோதை. இருவரையும் கண்ணனே தேர்ந்தெடுத்ததால் "இருதாயைப் பெற்று " என்று கூறியுள்ளேன்.
** இருதாரம் - பாமா, ருக்மணி
கலியுகத்தில் பாவங்கள் பல்கிப் பெருகும்;
** இருதாரம் - பாமா, ருக்மணி
நலம்நாடும் மாந்தர்கள் வாடிமனம் சோர்வார்.
உலகத்தை அப்போ தழித்துப் புதுப்பிக்க
கல்கியவ தாரம் வரும்.
உலகத்தை அப்போ தழித்துப் புதுப்பிக்க
கல்கியவ தாரம் வரும்.
( பல விகற்ப இன்னிசை வெண்பா )
Dasavataram in venba form wonderful
ReplyDeleteThank you for your encouragement, Varadarajan.
DeleteRamesh, I admire your deep Knowledge in Tamil grammar. I think this would have been the shortest narration ever produced describing all the Ten Avathars of Sri Narayana.
ReplyDeleteVery nice to read and easy to understand this great literature even for people like me .
I pray Sri Narayana to bless you with more creative work like this .
Ramani.
Thank you for your kind words.Your encouragement keeps me going.
DeleteExcellent . Thanks
ReplyDeleteIt is a must read for all Hindus who are not clear about the ten avatars of Dasavatharams. Our friend Ramesh has explained so much in so few a few words. உள்ளங்கை நெல்லிக்கனிபோல..
ReplyDeleteThanks a lot, Ananth!
Deleteதசாவதாரத்தை குறள்போல் இவ்வளவு சுருக்கி ஆங்காங்கே புரியாத வார்த்தைகளுக்கு விளக்கம் அளித்தது தமிழ் மேல் உள்ள உன் ஆளுமை மெச்சத் தகுந்ததே.
ReplyDeleteபாராட்டுகளுக்கு மிக்க நன்றி, ராம்கி!
ReplyDelete