நேற்று மகாகவி பாரதியின் பிறந்த தினம்.
அவரை நினைவு கூர்ந்து வணங்கி ஒரு கவிதை.
அன்புடன்
ரமேஷ்
பாரதியார்
பிறந்த நாள் 11-12-2020
முடிந்த முண்டாசு ! முறுக்கிய கூர்மீசை!
நடுநெற்றிப் பொட்டின் கீழ் நாட்டின் விலங்கறுக்க
விடுதலை வேட்கையுடன் துடிக்குமிரு கருவிழிகள் !
தடித்தவிரு உதடுகளைத் திறந்தவுடன் தடையின்றி
தொடுத்ததோர் வில்விட்டு விரைகின்ற கணைகள்போல்
அடுக்கடுக் காகவரும் அழகுத் தமிழ்க்கவிதை !
மிடுக்கோடு மடித்துக் கோத்திட்ட கையிரண்டும்
முடியரசன் முன்னாலும் கவியரசர் நானென்று
அடங்க மறுத்திட்டு முன்னிருத்தும் இறுமாப்பு!
மடித்தெடுத்துக் கட்டிய கச்ச உடையோடு
எடுத்து முன்வைக்கும் பீடு நடையோடு
தடைகள் தூளாக்கி தடம் பதிக்கும் திண்கால்கள் !
உன்னுருவம் நோக்கையிலே பொங்கியெழும் புத்துணர்வு
என்மனதில் எந்நாளும் இனியதமிழ்க் கவியரசே!
Very nice definition of his appearance cum which depicts his character.
ReplyDeleteSUNDER
Thanks.His appearence always was an inspiration to me - as were his poems - and since not much had been said about it I thought it fit to write a poem on it.
DeleteGreat description of his courageous face and provoking Tamil songs. Well done. Venkat
ReplyDeleteThanks.His appearence always was an inspiration to me - as were his poems - and since not much had been said about it I thought it fit to write a poem on it.
DeleteSuper poem on Mundasu kavignan brings him in front our eyes.
ReplyDeleteThanks.His appearence always was an inspiration to me - as were his poems - and since not much had been said about it I thought it fit to write a poem on it.
Deleteஎன்ன ஒரு நடை என்ன ஒரு சரளம். பாரதியின் சாயலை நன்கு எடுத்துரைத்தீர் நண்பரே.
ReplyDeleteNice depiction in Bharathi style 👏👏
ReplyDeleteThanks a Lot, Manian!
Deleteபாராட்டுக்கு மிக்க நன்றி, ராம்கி!
ReplyDeleteVery nicely brought his capabilities
ReplyDeleteVery nicely brought his capabilities
ReplyDeleteHis patriotic fervour in his poems instilled தேசபக்தி to many in Madras presidency those days. The British were waiting for an opportunity to nab him and send him to jail. They could not charge him under sedition laws.
ReplyDeleteA befitting tribute to the Mahakavi by Ramesh in his own beautiful style.
Regards.
Thanks, Ananth!
Deleteஅருமை ரமேஷ். தமிழன் என்று சொல்லடா. தலை நிமிர்ந்து நில்லடா.
ReplyDeleteமிக்க நன்றி, சங்கரலிங்கம்!
Delete