Search This Blog

Dec 5, 2020

குறள் மேல்வைப்பு வெண்பா - 20


குறள் மேல்வைப்பு வெண்பா - 20





நேற்றைய செய்தித் தாளில் படித்த ஒரு செய்தி - "ஷோலாப்பூரை சேர்ந்த ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் உலகின் தலை சிறந்த ஆசிரியராக ஒரு சர்வதேசப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்காக அவர் ஒரு மில்லியன் டாலர் பரிசையும் பெற்றார்" என்பது.  ஆனால் செய்தி இத்தோடு முடியவில்லை! அவர் பெற்ற அந்தப் பரிசுத்  தொகையில் பாதியை  தன்னோடு இறுதிச் சுற்றில் போட்டியிதத்  தேர்ந்தெடுக்கப்பட்டுத் தோல்வியடைந்த  மற்ற ஒன்பது பேர்களுடன் பகிர்ந்து கொண்டார்! அதற்கு அவர் கூறிய காரணம் " கடைசி வரை போட்டிக்குத் தேர்வு பெற்ற மற்ற அனைவரும் மனம் உடையாமல் அவர்களது சிறப்பான கல்விப்பணியைத் தொடர இது ஊக்கமளிக்கும் " என்பதாகும்!

"ஊருணிநீர் நிறைந் தற்றே உலகவாம் , 
பேரறி வாளன் திரு " 

என்னும் வள்ளுவர் வாக்கிற்கு இது ஒரு எடுத்துக்காட்டு!

இச் செயலைப் பாராட்டி . நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு  குறள் மேல்வைப்பு வெண்பா!

அன்புடன் 

ரமேஷ்  

பி.கு: குறள்  மேல் வாய்ப்பு வெண்பாவில் முதல் இரண்டு அடிகள் ஒரு செய்தியையோ அல்லது அனைவரும் அறிந்த ஒரு கதையையோ குறிக்கும். மூன்றாம், நான்காம் அடிகளில்  அது குறித்த குறள் இடம் பெறும். நான்கு அடிகளும் சேர்ந்து இலக்கணத்துக்குட்பட்ட ஒரு வெண்பாவாக அமையும்.  என்னுடைய முந்தைய குறள் மேல்வைப்பு வெண்பாக்களை , தேடிப்  படிக்க  வசதியாக , ஒரு தொகுப்பாக அமைத்திருக்கிறேன்!



பரிசாகத்   தான்பெற்ற பொற்கிழியில் பாதி     

பிரித்தே   பகிர்ந்திட்டான்    தோற்றோ  ருடன்கூட  

ஊருணிநீர் நிறைந் தற்றே உலகவாம் 

பேரறி வாளன் திரு  


(பல விகற்ப இன்னிசை வெண்பா)


14 comments:

  1. Appreciate your appreciation for Ranjitsinh Disale.

    ReplyDelete
  2. Generous gesture by Sholapur teacher very nicely brought out by your Venba

    ReplyDelete
  3. ஈரடியில் பொருள் கூறும் குறளின்  மேல் மற்றுமோர் 
    ஈரடி வைத்து நீர் புனைந்திட்ட வெண்பாவின் 
    நாலடியும் படித்து யாம் இன்புற்றோம் உமக்கு 
    காலடியான் தரட்டும் அருள்.

    ReplyDelete
  4. நடந்த கதையை ஈரடியில் கூறி செய்திக்கு இணையான குறளையும் இணைத்து கொடுத்த இந்த அமிழ்தம் சர்க்கரைப்பந்தலில் தேன்மாரி பொழிந்ததன்றோ!

    ReplyDelete
  5. தனக்கு கிடைத்ததை பகிர்ந்துகொண்ட அந்த ஆசானுக்கு கிடைத்த மகிழ்ச்சி அந்த பரிசினை பெற்றபொழுது கிடைத்த மகிழ்ச்சையை காட்டிலும் மேலானதாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அதை பறைக்கூற நீ தேர்ந்தெடுத்த குறள் அதனினும் மகிழ்ச்சி தரவல்லது. மிக அருமை ரமேஷ்

    ReplyDelete
  6. ஆக..வள்ளுவருடன் கை கோர்த்து விட்டீர்
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. Your வெண்பா is a great tribute to Ranjitsingh’s great gesture Ramesh.

    ReplyDelete