இடுக்கண் வருங்கால் ---
கொரானாவுக்குப் பயந்து எல்லாரும் தலையில் கை வைத்துக் கொண்டு இருக்கும் இந்த சமயத்தில், கொஞ்சம் சிரித்தால் என்ன?
இரண்டு பாடல்கள், கொரானாவை மையப்படுத்தி- நீங்கள் சிரிப்பதற்காக!
முதலாவது - ஒரு லிமெரிக். Black Humour வகையைச் சார்ந்தது.
அதைப் படித்து முகத்தைச் சுளிப்பவர்களுக்கு ( என் வீட்டிலேயும் உண்டு!) அடுத்த பாடல் --- ஆங்கிலச் சொற்கள் கலந்த ஒரு நேரிசை வெண்பா!
அன்புடன்
ரமேஷ்
பாடல் -1
மூக்கை முகத்தை மூடுகின்ற கவசம்
கிருமிக்கு எதிராய் ஓர் துவசம் *
----------வெளியில் போகும் போது
----------போட்டு முகத்தை மூடு!
போடாவிட்டால் அடுத்த வருஷம் திவசம்!
* துவசம் = கொடி , flag
பாடல் - 2
கொரானாவுக்குப் பயந்து எல்லாரும் தலையில் கை வைத்துக் கொண்டு இருக்கும் இந்த சமயத்தில், கொஞ்சம் சிரித்தால் என்ன?
இரண்டு பாடல்கள், கொரானாவை மையப்படுத்தி- நீங்கள் சிரிப்பதற்காக!
முதலாவது - ஒரு லிமெரிக். Black Humour வகையைச் சார்ந்தது.
அதைப் படித்து முகத்தைச் சுளிப்பவர்களுக்கு ( என் வீட்டிலேயும் உண்டு!) அடுத்த பாடல் --- ஆங்கிலச் சொற்கள் கலந்த ஒரு நேரிசை வெண்பா!
அன்புடன்
ரமேஷ்
பாடல் -1
மூக்கை முகத்தை மூடுகின்ற கவசம்
கிருமிக்கு எதிராய் ஓர் துவசம் *
----------வெளியில் போகும் போது
----------போட்டு முகத்தை மூடு!
போடாவிட்டால் அடுத்த வருஷம் திவசம்!
* துவசம் = கொடி , flag
பாடல் - 2
இக்கட்டு கள்மிக்க வாழ்வென்ற ஆட்டத்தில்
விக்கெட்டு* வீழ்வது எப்போதோ --- பக்கட்டை
காலாலே நாம்உதைக்கும் காலம்** வரும்வரையில்
வேலா யுதனே துணை
* Wicket
** Kicking the bucket
Excellent ��I am enjoying the poems! A warning with a wit.
ReplyDeleteGOOD to read when depressed
ReplyDeleteEnjoyable
ReplyDeleteவாழ்க்கை பதிவு நம்பிக்கை தரக்கூடிய இருத்தல் நலம் . Pessimist approach not Good for Modern poet
ReplyDeleteRamesh, this was really"black". Let us be more positive in these times. Age is only a number, as theysay and hence not the time to go looking for "buckets"!!!!
ReplyDeleteThiagarajan
கருத்துக்கு நன்றி! வருத்தங்கள் வேண்டாம்.
Deleteநெருப்பென்று சொன்னால் நா சுடுவதில்லை!
திருந்தாமல் திரிகின்ற மனிதற்கோர் பாடம்
சிரிப்புடன் சேர்த்து சொல்லவே முயன்றேன்!
கருப்பு நகைச்சுவையின் குறிக்கோளும் அதுவே!
விருப்புடன் பலரும் விரும்பிப் படித்து
நேர்மறைக் கருத்துகள் பலவும் நிறைத்து
வேறுபல பாடல்கள் தரவும் முனைவேன்
நயமான எதுகை மோனை
ReplyDeleteKicking the proverbial bucket. Nice..
ReplyDeleteNice ones. Some suggestions:
ReplyDeleteFirst poem : Change Davasam with "adutta varusham un photokku poduvaar maalai"
Second poem : Replace "Velayudan" with an Umpire named after a God, to continue the theme of cricket!
As you know,In the limerik format , the last words of the forst,second and the fifth lines should rhyme!That is why I used ' Davasam'!. One of my friends suggested to use the expression " ootiduvom sanghu". To satisfy him I penned the following revision.
Deleteதலைவிரித்து ஆடுது கொரானாநோய் இங்கு - அது
பரவாமல் தடுப்பதிலே உனக்குமுண்டு பங்கு.
--------வெளியே போகும் போது
--------மூக்கை முகத்தை மூடு
செய்யா விட்டால் உனக்கும் ஊதும் சங்கு!
Will try to write one using your suggestion!