பள்ளிக்கு அனுப்பும் படலம்
நான் இப்போது தங்கி இருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்பில் காலை ஏழு மணி அளவிலேயே குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்துவிடும். அவற்றில் தத்தம் குழந்தைகளை ஏற்றிவிட தாய் தந்தையர் கூட்டமாக வந்து காத்திருப்பார்கள். சில சமயங்களில் பேருந்தைப் பிடிக்க சற்று கால தாமதமாக புறப்பட்ட பெற்றோர் புத்தகப்பை, உணவுப் பை சகிதமாக, ஓடி வருவதும் , குழந்தைகளோ சிறிதும் கவலையின்றி பின்னல் மெதுவாக வருவதும் ஒரு கண்கொள்ளாக் காட்சி!

இதை விவரித்து ஒரு பாடல்- !
அன்புடன்
ரமேஷ்
புதிதாய் வாங்கிய புத்தகம் அடைத்து
-----பிதுங்கும் பையோ தொங்குது முதுகில்!
மதியத் துணவு அடைத்தொரு பெட்டி
-----அதனுடன் கூட அருந்தநீர்க் குடுவை
மிதச்சூட் டோடுபால் நிரப்பிய பிளாஸ்க்கு
-----இடைவே ளுக்கோ தேன்பழத் துண்டு-இவ்
விதம்பல நிறைத்த பையொரு தோளில்- பெண்
-----போட மறுத்த காலணி கையில்!
மதியத் துணவு அடைத்தொரு பெட்டி
-----அதனுடன் கூட அருந்தநீர்க் குடுவை
மிதச்சூட் டோடுபால் நிரப்பிய பிளாஸ்க்கு
-----இடைவே ளுக்கோ தேன்பழத் துண்டு-இவ்
விதம்பல நிறைத்த பையொரு தோளில்- பெண்
-----போட மறுத்த காலணி கையில்!
பதைத்து பள்ளிக் கூட வண்டியை
------பிடிக்க முன்னால் ஒடும் தந்தை!
பத்தடி பின்னால் பதைப்பெதும் இன்றி
பாதை யோரத்து செடியில் பூத்த
பட்டாம் பூச்சியை எட்டிப் பிடித்துக் கை
கொட்டிச் சிரிக்கும் குறும்புக் குழந்தை .
Very nice and humorous
ReplyDeleteLovely! Very well portrayed the scenario of school going children and their parents..
ReplyDeleteSeeing beauty and humour in day to day happenings is the best way to enjoy life. Wonderful observation and lovely Kavidai. Thanks.
ReplyDeleteNice
ReplyDeletenice compilation
ReplyDeleteBesides exhibiting yourdrawing skill you have brought drawn up a mental picture of the daily occurance in many houses. The only difference, in many houses, the father is replaced by the grandfather😊ST
ReplyDelete