சார்வரி ஆண்டு வேண்டுதல்கள்
விகாரி ஆண்டு முடிந்தது நேற்று
முகாரி ராகப் பின்னணி யில்.
கொரானா நோயின் கூரம்பு
சரசர வெனநமைத் தாக்கையிலே
கண்ணால் காண முடியாத
கிருமியின் கோரத் தாண்டவத்தால்
எண்ணொ னாத்துயர் நிறைந்தெங்கும்
கண்ணீர் வெள்ளம் பெருகுகையில்
வருகுது புதிய ஆண்டின்று
சார்வரி யெனும் பெயருடனே !
வரவேற் புரையை வாசிக்க
வார்த்தைக ளெதுவும் தோன்ற லையே!
சார்வரி என்னும் வார்த்தைக்கு
வீறி யெழல்எனத் தமிழ்ப்பெயராம்.
தீரா நோயை ஒழித்திடவே
வீறுகொண் டனைவரும் எழுந்திடவும் ,
சமூக விலகல் நிலைமாறி
சுமூக நிலையும் திரும்பிடவும்
நீர்நிலை நிரம்பிட மழைபொழிந்து
ஏர்முனை இயக்கம் சிறந்திடவும்
சீர்குலைந் திருக்கும் நிலைமாறி
பொருளா தாரம் நிமிர்ந்திடவும்
கண்ணால் காணாக் கிருமியினால்- இன்று
கற்கும் பாடங்கள் நிலைத்திடவும்
கண்ணில் தெரியா இறைவனையே- நம்
மனதில் இருத்தி வேண்டிடு வோம்.
அன்புடன்
ரமேஷ்
www.kanithottam.blogspot.com
விகாரி = எழில்மாறல்
சார்வரி = வீறியெழல்
Excellent. Find no words to appreciate your choice of words.
ReplyDeleteSUNDER
Thanks a lot.
Deleteமிக அருமை
ReplyDeleteFine rhythms. Well composed. Hope Sarvari brings full happiness to all. NRS
ReplyDelete