Search This Blog

Feb 4, 2021

பிறவிப் பயன்

 "பிறவிப் பயன்"

சென்ற வருடம் பிப்ரவரி 8 ஆம் தேதியன்று 1970 ஆம் ஆண்டு தேர்வு பெற்ற என்னுடைய பொறியியல் கல்லூரி கல்லூரிக்  குழு நண்பர்கள் அனைவரும் கோவையில் சந்தித்துப்  பொன்விழா கொண்டாடினோம். 

அந்த சமயத்தில், அந்த வருடம் தேர்வு பெற்ற  எல்லா நண்பர்களைப்  பற்றிய விவரங்களையும்  சேகரித்து, அதனோடு  அவர்கள் குடும்பப் புகைப்படத்தையும் இணைத்து   எங்கள்  கல்லூரித் தோழன் எக்ஸ். துரைராஜால் ஒரு  நினைவுப் புத்தகம் , "பிறவிப் பயன்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. 

அந்த பொன்விழா நிகழ்வு நடைபெற்று இன்னும் சில நாட்களில்  ஒரு ஆண்டு நிறைவடையப்  போகிறது.

அதை நினைவு கூறும்  வகையில் , பிறவிப்  பயன் என்ற தலைப்பில் ஒரு வெண்பா பாடல் தொகுப்பை பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

அன்புடன் 

ரமேஷ் 



பிறவிப்  பயன்

வீடு மனைவாங்கி வங்கிப் பணம்சேர்த்தால்
தேடும் மனஅமைதி கூடுமோ?- வாடும்
நலிந்தோர்க்கு நாம்செயும் நல்லுதவி மூலம்
பலிக்கும் பிறவிப் பயன் .

(இருவிகற்ப நேரிசை வெண்பா )


இவ்வுலக வாழ்வினை  நாம்விடுக்கு முன்னமே   
செவ்விய நற்செயல் செய்வதால்  - இவ்வுலகோர் 
நல்லான்  இவனென்று சொல்லியே  உள்ளிடின்*          
பல்கும்   பிறவிப் பயன்.

உள்ளுதல் = நினைத்தல்,எண்ணியிரங்கல்
(இருவிகற்ப நேரிசை வெண்பா )



உறவை  ஒதுக்கி   தொடர்புகள்   நீக்கி 
துறவறம் பூணுதல் வேண்டாம் - அறவழிப் 
பாதையை  மீறாமல்  நேரே  நடந்தால் 
அடைவோம் பிறவிப் பயன் 
(பல விகற்ப இன்னிசை வெண்பா)


இனிதான தாயினும் மானிடச் சன்மம்    
இனிமீண்டும் ஏனோ உனக்கு - மனிதா 
கனியிருப்பக்  காயேன்?  பிறத்தலை மீண்டும்**      
துணித்தலே *   பிறவிப் பயன்.

துணித்தால் = துண்டித்தால் 
** மீண்டும் பிறத்தலை என்று பொருள் கொள்ளவும்.

(இருவிகற்ப நேரிசை வெண்பா )








8 comments:

  1. We can try such a publication for GBHS64

    ReplyDelete
  2. வெண்பாக்கள் அனைத்தும் அருமை. பிறவிப்பயன் என்பதைக் கேட்டாலே நமது தங்கவிழா சந்திப்பும் நண்பர் அளித்த அரிய பொக்கிஷமும் ஞாபகம் வருகிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. ரமேஷ்,
    நீயும் உன் பிறவிப் பயனை அடைந்திருக்கிறாய் என்றால் அது மிகையல்ல.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. Excellent Ramesh ! Your poetic skills are growing day by day .
    I think you can come out with a book of such “ Kavidai “.

    ReplyDelete
  5. ரமேஷின் அருமையான கவிதைகளை படிப்பதினால் யான் பிறவிப்பயன் அடைந்தேன் என்றால் மிகையாகாது.

    ReplyDelete