பிரதோஷப் பாடல் -31
நாரைக்கு முக்தி கொடுத்த படலம்
தவமுனிவர் நீராடும் தடாக மீனைத்
-----தானுண்ணல் தவறென்று தவிர்த்த நாரை
சிவனுறையும் திருக்கோவில் தல மடைந்து
-----தவறாமல் தினம்மூழ்கி குளிக்கும் நேரம்
இவணுறையும் மீனைப்புள் ளினங்க ளுண்டால்
-----உண்டாகும் பாவவினை தவிர்க்க வேண்ட
சிவனும்பொற் றாமரைக் குளத்தி லென்றும்
-----உயிரினங்க ளுறையாத வரமளித் தான்
பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வசிப்பத்தில்லை என்று கூறப்படுகிறது. இந்தத் தகவல் சரிதானா என்று மதுரை வாசிகள் சொல்லவேண்டும்.
சிவபெருமானை வணங்கி வந்த ஒரு நாரை , பிற உயிர்களைக் கொன்ற பாவம் தன்னைத் தீண்டாதிருக்கும் பொருட்டு பொற்றாமரைக் குளத்தில் உள்ள மீன்களை உண்ணுவதை முற்றும் தவிர்த்துவிட்டது. நாரையின் செயலைக் கண்டு மனமகிழ்ந்த பெருமான் நாரைக்கு வேண்டும் வரம் கொடுக்க விழைந்தார். நாரை வேண்டிய வரம் இதுவே :
" பெருமானே, எண்ணெய் போன்ற பறவை இனங்கள் இக்குளத்தில் வசிக்கும் மீன்களை உண்ணுவதால் பாவம் அடைகின்றன. அதை அவை தவிர்க்குமாறு, இக்குளத்தில் மீன்கழும், பிற உயிர்களும் வசிக்காமலிருக்கும் வரமருள வேண்டும் ."
இவ்வரத்தை சிவபெருமான் அளித்து நாரைக்கும் முக்தி அளித்தார். அது முதல் , பொற்றாமரைக் குளத்தில் மீன் முதலிய உயிர்கள் வாழுவதில்லை என்பது ஐதீகம்.
இன்றைய பாடற் பொருளும் இதுவே!
அன்புடன்
ரமேஷ்
நாரைக்கு முக்தி கொடுத்த படலம்
தவமுனிவர் நீராடும் தடாக மீனைத்
-----தானுண்ணல் தவறென்று தவிர்த்த நாரை
சிவனுறையும் திருக்கோவில் தல மடைந்து
-----தவறாமல் தினம்மூழ்கி குளிக்கும் நேரம்
இவணுறையும் மீனைப்புள் ளினங்க ளுண்டால்
-----உண்டாகும் பாவவினை தவிர்க்க வேண்ட
சிவனும்பொற் றாமரைக் குளத்தி லென்றும்
-----உயிரினங்க ளுறையாத வரமளித் தான்
In my school days, on my visits to Meenakshi amman temple, I don't think I ever saw a fish. For that, we used to go to Thirupparankundram temple (and feed pori to fish).
ReplyDeleteSong, as usual, is excellent.
I have not observed the living of fish or otherwise at the temple tank. Yet, the lyrics are superb. Best wishes NRS
ReplyDeleteபாடல் மிகவும் அருமை!
ReplyDelete