முதுமை -2 - நான் மட்டும் ஏனோ தனியாய்
மனம் எப்போதும் ஒரேநிலையில் இருப்பதில்லை.
சில சமயங்களில் மகிழ்ச்சி .
சில சமயங்களில் அமைதி.
பல சமயங்களில் இரண்டுக்கும் இடைப்பட்ட இரண்டுங்கெட்டான் நிலை,
இன்னும் சில சமயங்களில் மன அழுத்தம்; வருத்தம் கலந்த ஒரு சுயபச்சாத்தாபம்.
நான் எழுதும் பாடல்கள் அவ்வப்போது இருக்கும் மனநிலையைப் பொருத்து அமைகின்றன.
கீழே எழுதி பதித்திருக்கும் பாடல் எந்த வகையைச் சேர்ந்தது என்பது உங்களுக்கு சுலபமாகப் புரியும்!
அன்புடன்
ரமேஷ்
நான் மட்டும் ஏனோ தனியாய்

நித்தமும் காலையில் உலவப் போகையில்
ஓத்த வயதினோர் பலரும் கூடியே
சத்தமாய் பேசி சிரித்து மகிழ்கிறார்
--------நான் மட்டும் ஏனோ தனியாய்!
சுயமாக நடக்கின்ற செயல்திறம் குறைந்தாலும்
வயதான தம்பதிகள் ஒருவரு டேயொருவர்
கைகோத்து உறுதுணையாய் நடப்பதை நோக்குகின்ற
--------நான் மட்டும் ஏனோ தனியாய்!
வெளியிலே செல்கையிலும் விருந்தினர் வருகையிலும்
களிப்புடன் கதைபேசும் காலங்கள் குறைவாகி
வெளிப்பூச்சுப் புன்னகை சலிப்புடன் புரிந்தபடி
--------நான் மட்டும் ஏனோ தனியாய்!
சுற்றியே எனைச்சூழ்ந்து உற்றார் பலரிருந்தும்
மற்றபிற தேவைகள் குறையின்றித் தீர்ந்தாலும்
பற்றின்றி தாமரை இலைமேலே நீர்போல
--------நான் மட்டும் ஏனோ தனியாய் !
புத்தகம் பலவற்றை புரட்டிப் படித்திட்ட
தத்துவங் கள்ளெதுவும் பயனின்றி யேபோக
சித்தமும் எதிலுமே செல்லாது பித்தமுற

Too bad. It is a part and parcel of life. There is no common recipe for all.
ReplyDeleteYes. I think everyone feels it sometime, particularly after retirement when your activities have drastically come down!
ReplyDelete