Search This Blog

Nov 5, 2018

பிரதோஷப் பாடல் - 13

பிரதோஷப்  பாடல்  - 13


இன்று பிரதோஷம். 
நாளை தீபாவளி.
தீபாவளியை வெவ்வேறு  வழிகளில் நாடு முழுவதும் கொண்டாடுகிறார்கள்.
வடநாட்டில், தீபாவளி இரவன்று கேளிக்கையாக சூது ஆடுவது ஓர் பரவலான பழக்கம்.
இது எவ்வாறு வந்தது என்று ஆராயப் புகுந்தபோது ஒரு ஆச்சரியமான செய்தியைப் படித்தேன்.
ஒரு தீபாவளியன்று உமையவள், சிவபெருமானுடன் பகடை ஆடுகிறார்.
 அப்போது அவள், தீபாவளியன்று பகடை ஆடுபவர்களுக்கு இலக்குமியின் அருள் வந்து சேரும் என்று விதித்ததாக  ஒரு புராணக் கதை.
இதுவே வடநாட்டில் தீபாவளியன்று பகடை ஆடும் பழக்கம் வந்ததற்கு காரணமாக் கூறப்படுகிறது.
இன்றைய பிரதோஷத்தையும், நாளைய தீபாவளியையும் சேர்த்து இன்றைய பிரதோஷப்  பாடலைத் தந்திருக்கிறேன்.

அன்புடன் 
ரமேஷ்.

பின் குறிப்பு : இது பற்றி வேறுபட்ட கதைகளும் உண்டு. அவ்வாறான ஒரு கதையில்,நாரதரால் தூண்டப்பட்ட இருவரும் சூதாடத் தொடங்கியதாகவும், ஆட்டத்தில் சிவபெருமான் தோற்று தன்  அத்தனை உடமைகளையும் இழந்து கோபித்து கானகம் சென்றதாகவும் கூறப்படுகிறது.





தாயுமை யாளுடன் தீபா வளியன்று 
தாயமா டிக்களித்த  த்யாகேசா--  சேயெந்தன்    
பாவங்கள் நீங்க  பிரதோச நாளுந்தன் 
சேவடிகள் சேவிக்கி  றேன்  .

(இரு விகற்ப நேரிசை வெண்பா)

2 comments:

  1. Hope you win a bounty through gambling today. HAPPY DEEPAVALI. Sunder

    ReplyDelete
  2. Belated happy birthday wishes to your wife

    ReplyDelete