பாட்டியும் பேத்தியும்
இன்று பல குடும்பங்களில் மகன்களும் மகள்களும் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழுகிறார்கள். தங்கள் பேராக் குழந்தைகளுடன் தமிழில் உரையாட முடியவில்லையே என்பது தாத்தாக்களுக்கும் பாடல்களுக்கும் ஒரு பெரிய குறைதான்.
அவர்கள் ஆண்டு விடுப்பில் சென்னை வருகையில் முடிந்த அளவு அவர்களுக்கு தமிழைக் கற்றுத் தரவேண்டும் என்ற முயற்சியில் தாத்தா-பாட்டிகள் ஈடுபடுகிறார்கள்..
அப்படிப்பட்ட ஒரு முயற்சியின் முடிவுதான் இது !
அப்படிப்பட்ட ஒரு முயற்சியின் முடிவுதான் இது !
அன்புடன்
ரமேஷ்
இரண்டு மாதம் கோடை விடுப்பில்
-----வந்தாள் அமெரிக்கப் பேத்தி.
தமிழில் பேசக் கற்றுக் கொடுக்க
-----முயன்றாள் நம்மூர்ப் பாட்டி
இரண்டு மாதம் ஆனபின்னே
-----பேத்தி திரும்பிப் போச்சு.
பாட்டி இப்போ அமெரிக்கன் இங்கிலீஷில்
-----பொளந்து தள்ளல் ஆச்சு! 3
No comments:
Post a Comment