தோல் மருத்துவர் முருகு சுந்தரம் அவர்கள் பதிப்பித்து வரும் "தோல் மலர்" இதழுக்காக நான் எழுதி பகிர்ந்து கொண்ட ஒரு பாடல்.
அன்புடன் ரமேஷ்
சில ஆண்டுகளுக்கு முன் தோல் அரிப்பாலும் , தொடக்க நிலை படுக்கைப் புண்ணாலும் பாதிக்கப்பட்டிருந்த என் உறவினருக்கு செய்து பயனளித்த ஒரு மருத்துவம் இது.
கத்தாழை இலையைக் கசக்கிப் பிழிந்து
-----சத்தான அதன்சா றெடுத்து
அத்தோடு தேன்கொஞ்சம் சேர்த்துக் குழைத்து
-----பதமான ஒர்கலவை செய்து
நித்தமும் தடவினால் சருமத் துபாதைகள்
-----மொத்தமும் மறைந்து போகும்
வாள்போன்று நீண்டகற் றாழை இலையை
நீள்வாக்கில் வெட்டியுள் ளுள்ள சதையை
கூழ்போல அரைத்துஅக் குழம்பை நாளும்
தோல்மீது தவறாமல் தடவி வந்தால்
உலர்சருமம் அம்மைநோய்த் தழும்பு போன்ற
பலகுறைகள் விலகியே பொலியும் தோலே !
No comments:
Post a Comment