"அடி - உதை - குத்து- கொல்லு"-
இதுதானா நம் புதிய தேசிய கீதம்?
இன்று நம்முடைய நாடு சுதந்திரம் பெற்று 71 ஆண்டுகள் ஆகிவிட்டன.
பல துறைகளிலும் நாம் முன்னேற்றம் அடைந்திருக்கிறோம். இதை மறுப்பதற்கில்லை.
இன்று நாம் மகிழ்வுடன் அந்த முன்னேற்றங்களை எண்ணிப் பார்த்து மகிழ வேண்டிய நேரம்.
என்றாலும், சில நாட்களாக மக்களுடைய எண்ணத்திலும், நடத்தையிலும் ஒரு வருந்தத்தக்க மாறுதல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று அஞ்சுகிறேன்!
சிறு சிறு காரணங்களுக்காகவும் , வதந்திகளை நம்பியும், கூட்டமாக வன்முறையில் ஈடுபடும் நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.
பிள்ளை பிடிக்கிறார்கள் என்ற வதந்தி, கல்லூரிக்குச் செல்லும் பேருந்தைக் கடத்தி வன்முறை, ( இது சென்னைக்கே உரியது), பசுவைக் கொள்கிறார்கள் என்ற வதந்தி, கலப்புத் திருமணம் -- இவ்வாறு வெவ்வேறு காரணங்களுக்காக. சட்டத்தை தன கையில் எடுத்துக்கொண்டு, கூட்டம் கூட்டமாக வன்முறைகளில் ஈடுபடும் நிகழ்வுகளைப் பற்றி , மனம் வருந்தி இனியும் இத்தகைய நிகழ்வுகள் நடக்காத்திருக்க வேண்டி, இந்த சுதந்திர தினத்தன்று ஒரு பாடல்.
அன்புடன்
ரமேஷ்
"அடி - உதை - குத்து- கொல்லு"-
இதுதாநம் னா புதிய தேசிய கீதம்?
செய்தி
வெளியூருக் கூட்டம்ஒண்ணு
நம்மூருக் குள்ளவந்து
பிள்ளை பிடிக்குதுன்னு
வாட்சப் நியூசு .
கூட்டம்
பஞ்சாயத்து பார்க்கருகே
தமிழ்தெரியா பெண்ணொருத்தி
பள்ளிப் பசங்களுக்கு
மிட்டாய் தராளாம்.
விடாதே நீ , அவளப் பிடி
கட்டிப்போட்டு தோலைஉரி .
அடி - உதை - குத்து- கொல்லு
அடி - உதை - குத்து- கொல்லு
பொதுமக்கள்
------இதுதானா நாம் பெற்ற
-------புதிய சுதந்திரம்?
-------இதுதானா நம் புதிய
செய்தி
விடுமுறையும் முடிஞ்சாச்சு
கல்லூரி திறந்தாச்சு
பஸ்நாளை கொண்டாடும்
நேரம் வந்தாச்சு
கூட்டம்
ரூட்டுதலை தலைமையிலே
பேருந்தை கடத்துவோம்.
பொதுமக்கள் போலீசு
தடைசெஞ்சா மிரட்டுவோம்.
கல்லெறிவோம் சில்லுடைப்போம்
பேருந்தில் தீயிடுவோம்
அடி - உதை - குத்து- கொல்லு
அடி - உதை - குத்து- கொல்லு
பொதுமக்கள்
------இதுதானா நாம் பெற்ற
-------புதிய சுதந்திரம்?
-------இதுதானா நம் புதிய
செய்தி
வீதியிலே பசுமாட்டை
ஒட்டிக்கிட்டு போரவங்க
பசுவைக்கொல்லப் போறாங்கன்னு
சேதி சொன்னாங்க.
கூட்டம்
சொன்னசேதி சரிதானா
இல்லவெறும் பொய்தானா
நின்னுபேச நேரமில்லை
கொன்னுபசுவை போடுமுன்னே
ஓடிப்போயி ஆளைப்பிடி
உருட்டிமிரட்டி விரட்டிஅடி
அடி - உதை - குத்து- கொல்லு
அடி - உதை - குத்து- கொல்லு
பொதுமக்கள்
------இதுதானா நாம் பெற்ற
-------புதிய சுதந்திரம்?
-------இதுதானா நம் புதிய
-------தேசிய கீதம்?
-
செய்தி
மேல்ஜாதி பெண்பிள்ளை
கீழ்ஜாதி பையனையே
காதலித்து கைப்பிடித்து
ஓடிப் போனாளாம்
கூட்டம்
வீதியிலே நடக்கையிலே
சாதிசனம் சிரிக்கிறது! !
ஓடிப்போன ஜோடிகளை
தேடிப்பிடித்து கட்டிவிடு .
தோலை உரித்துவிடு
காலனியைக் கொளுத்திவிடு
அடி - உதை - குத்து- கொல்லு
அடி - உதை - குத்து- கொல்லு
பொதுமக்கள்
------இதுதானா நாம் பெற்ற
-------புதிய சுதந்திரம்?
-------இதுதானா நம் புதிய
-------தேசிய கீதம்?