போட்டு உடை ! ஞானம் விதை!
எதையும் போட்டு உடைத்தால் பொருள்கள் சேதப்படும்.
இதற்கும் சில விதி விலக்குகள் உண்டு !
இலக்கணத்தை "உடைத்தால்" பிறக்கும் புதுக்கவிதையைப் போல --
நாம் நம்முடன் ஒட்டியிருக்கும் சில குணங்களை "உடைத்தால் "
நல்லவை நடக்கும்!
ஞானம் பிறக்கும் !
அன்புடன்
ரமேஷ்
போட்டு உடை ! ஞானம் விதை!
எதையும் போட்டு உடைத்தால் பொருள்கள் சேதப்படும்.
இதற்கும் சில விதி விலக்குகள் உண்டு !
இலக்கணத்தை "உடைத்தால்" பிறக்கும் புதுக்கவிதையைப் போல --
நாம் நம்முடன் ஒட்டியிருக்கும் சில குணங்களை "உடைத்தால் "
நல்லவை நடக்கும்!
ஞானம் பிறக்கும் !
அன்புடன்
ரமேஷ்
போட்டு உடை ! ஞானம் விதை!
எள்ளை உடைத்தால் எண்ணெய் வரும் - நாட்டின்
எல்லை உடைந்தால் தொல்லை வரும்
வானம் உடைந்தால் மின்னல் வரும்
நாணம் உடைந்தால் மானம் கெடும்.
தானெனும் தருக்கினைப் போட் டுடைத்தால்
உள்ளம் உடைந்தால் தோல்வி வரும்- மனக்
கள்ளம் உடைத்தால் நேர்மை எழும் .வானம் உடைந்தால் மின்னல் வரும்
நாணம் உடைந்தால் மானம் கெடும்.
தானெனும் தருக்கினைப் போட் டுடைத்தால்
வாழ்க்கையின் வருத்தங்கள் விலகி விடும்.
மேகம் உடைந்தால் மழையும் வரும்- பண
மோகம் உடைந்தால் சோகம் விடும்.
பொய்கள் உடைந்தால் உண்மை வரும் - செய்
தீமை உடைத்தால் நன்மை வரும்
கரைகள் உடைந்தால் வெள்ளம் வரும்- உ(ள்)ளக்
குறைகள் உடைந்தால் நிறைவு வரும்
சிரிப்பு உடைந்தால் அழுகை வரும்- மனச்
செருக்கு உடைத்தால் பணிவு வரும் .
குறைகள் உடைந்தால் நிறைவு வரும்
சிரிப்பு உடைந்தால் அழுகை வரும்- மனச்
செருக்கு உடைத்தால் பணிவு வரும் .
முட்டை உடைந்தால் குஞ்சு வரும் -சிறு
விதைகள் வெடித்தால் பிஞ்சு வரும்
பருத்தி வெடித்தால் பஞ்சு வரும்- சுய
பருத்தி வெடித்தால் பஞ்சு வரும்- சுய
கருவம் உடைத்தால் இஞ்சை* விடும். இஞ்சை=* துன்பம்
தென்னங் காயைப் போட்டுடைத்தால்
தென்னங் காயைப் போட்டுடைத்தால்
இனிய இளநீர் பருக வரும்
தன்னகங் காரம் தனை உடைத்தால்
தன்முனைப்* பொழிந்து தெளிவு வரும். * தன்முனைப்பு=ego
இலக்கியம் தருவது பழங் கவிதை - அதன்
இலக்கணம் உடைத்தால் புதுக் கவிதை- நீ
பலகலை பயின்ற பண்டிதன் எனினுமுன்* *எனினும் உன்
தலைக்கனம் உடைத்தே ஞானம் விதை!
------------------------------------------------------------------------------------
அப்படி போட்டு உடை நண்பனே
ReplyDelete