குறள் மேல்வைப்பு வெண்பா -11
மூர்த்திகள் மூவரையும் கைக்குழவி யாய்மாற்றி
சேர்த்தணைத்துப் பாலளித்தாள் அத்திரியின் பத்தினியே!
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
The English Poetic versions :
by Rev.Pope
No God adoring, low she bends before her lord;
Then rising, serves: the rain falls instant at her word!
By Suddhaanandha Barathiar
Her spouse before God who adores,
Is like rain that at request pours.
The Meaning :
If she, who does not worship God, but who rising worships her husband, say, "let it rain," it will rain.
"பிறன் மனை நோக்காத பேராண்மை"யைப் பற்றி வள்ளுவர் எழுதியதை முன்னொரு பதிவிலே பார்த்தோம். கற்பில் சிறந்த பெண்டிரின் பெருமையைப் பற்றி வள்ளுவர் "வாழ்க்கைத் துணை நலம் " என்னும் அதிகாரத்தில் கூறுகிறார். இதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது அத்ரி என்னும் முனிவரின் மனைவி அனசூயா தேவியின் கதை.
அனசூயாவின் கற்பின் வலிமையை சோதிக்க விரும்பிய மும்மூர்த்திகளின் மனைவியரான மூன்று தேவியர்கள், அவளைப் பரிசோதிக்க எண்ணினார்கள். அதற்கு ஒப்பிய மும்மூர்த்திகளும் , மூன்று சன்யாசிகள் உருவெடுத்து அனசூயையின் குடிலுக்குச் சென்று, அவளிடம் தங்களுக்கு நிர்வாண பிக்ஷை அளிக்குமாறு ( உடைகள் ஏதுமின்றி உணவு படைக்குமாறு) கேட்டார்கள். அதிதிகளின் வேண்டுதலை மறுக்க இயலாத அனசூயை, தன் கணவனைப் பிரார்த்தித்து, அவர்கள் மேல் சில துளிகள் தண்ணீரைத் தெளிக்க, உடனே மூன்று சன்யாசிகளும் மூன்று குழந்தைகளாக மாறினர்! அனசூயையின் மார்பகத்தில் பால் சுரக்கத் துவங்கியது. மூன்று குழந்தைகளையும் ஆடைகளின்றி அணைத்தெடுத்து பால் புகட்டிப் பசி தீர்த்தாள் அனசூயை.
இந்த நிகழ்ச்சியை மேல்நிறுத்தி எழுதப்பட்டது கீழ்வரும் மேல்வைப்பு வெண்பா!
(இதன் பிறகு மூன்று தேவியர்களும் அனசூயையை வணங்கி வேண்ட, மும்மூர்த்திகளும் சுய உருவை அடைந்தார்கள். பின்னர் , அனசூயை தத்தாத்ரேயர், துர்வாசர்,சந்திரன் ஆகிய மூன்று மகன்களைப் பெற்றாள். அவர்களுள் தத்தாத்ரேயர் மும்மூர்த்திகள் ஒன்றிணைந்த அவதாரம் என்பது ஐதீகம். )
அன்புடன்
ரமேஷ்
அன்புடன்
ரமேஷ்
மூர்த்திகள் மூவரையும் கைக்குழவி யாய்மாற்றி
சேர்த்தணைத்துப் பாலளித்தாள் அத்திரியின் பத்தினியே!
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
The English Poetic versions :
by Rev.Pope
No God adoring, low she bends before her lord;
Then rising, serves: the rain falls instant at her word!
By Suddhaanandha Barathiar
Her spouse before God who adores,
Is like rain that at request pours.
The Meaning :
If she, who does not worship God, but who rising worships her husband, say, "let it rain," it will rain.
Maha Sati Anasuya is generally quoted as the
model of chastity. She was the wife of Atri Maharishi, a great sage and
one of the Sapta Rishis
Wanting to grant Maha Sati Anasuya her desire to
beget sons equal to Brahma, Vishnu and Siva, Sarasvati , Lakshmi, and Parvati requested their husbands to test the Pativrata Dharma of Maha Sati
Anasuya, and ask her to give them Nirvana
Bhiksha, that is, to give them food in a naked condition.
The Tri-Murtis (Gods Brahma,
Vishnu and Siva) agreed and took on the forms of Sannyasins, and appeared before Maha Sati Anasuya and asked her to
give them Nirvana Bhiksha Maha Sati Anasuya was in a great dilemma. She could not say
‘No’ to the Sannyasins.She had to maintain her Pativrata Dharma also.
She meditated on the form of her husband, took refuge in his feet and
sprinkled over the three Sannyasins a few drops of water . The Tri-Murtis were converted into three children . At the same time, there was
accumulation of milk in the breast of Maha Sati Anasuya. She thought
that those children were her own children and fed them with the milk in a
nude state and put them to the cradle.
Later , Sarasvati , Lakshmi, and Parvati went to Anasuya , asked her for Bhartri
Bhiksha (Praying for return of the husbands). Then the
three Gods, Brahma, Vishnu and Siva appeared in their true form and also granted her desire to beget sons equal to Brahma, Vishnu and Siva. Maha Sati Anasuya thus became the mother of Lord
Dattatreya (the sage-avatar of Divine Trinity Brahma, Vishnu and Siva),
the sage Durvasa and the moon-god Chandra.
No comments:
Post a Comment