Search This Blog

Oct 13, 2016

தசாவதாரம் 1- மச்சாவதாரம்

தசாவதாரம் -1

தாத்தாக்களுக்கு  ஏற்படும் ஒரு பெரிய சவால் பேரக் குழந்தைகளுக்குக்  கதை சொல்வது. கதை சொல்ல உட்காரும்போதுதான் "நமக்கு நன்றாகத் தெரியும்" என்று நாம் எண்ணிக்கொண்டிருந்த கதைகள் கூட முழுவதுமாக நினைவில் இல்லை என்ற ஞானோதயம் ஏற்படுகிறது. அது மட்டும் இல்லாமல், பேரன் பேத்திகள் குடைந்து, குடைந்து கெடுக்கிற கேள்விகள் வேறு ! இந்த சிக்கல்களிலிருந்து தப்பிக்கொள்ளத்தான் , நான் என்னுடைய தசாவதாரக் கதைகள் பற்றிய " ஞானத்தை" கொஞ்சம் புதிப்பித்துக்கொண்டேன் ( நன்றி - அமர் சித்ரா கதைகள் மற்றும் இணையங்களின் பதிப்புகள் ). இது வரை முழுதும் தெரியாது இருந்த சில விஷயங்களையும் தெரிந்துகொண்டேன். இது நான் பேரன் பேத்திகளுக்குச் கதை சொல்லப்போகும் நேரத்தில் உதவும். 

உங்களுக்கும் இவை கைகொடுக்கும் என்று நினைக்கிறன். 

முதலில் மச்சாவதாரம்.-  அவதாரம் பற்றிய கதைச் சுருக்கத்துடனும், தொடர்ந்து ஒரு வெண்பா வடிவிலும்.

அன்புடன் 

ரமேஷ்  

மச்சாவதாரம் 

ஒரு கல்பத்திற்கும் இன்னொரு கல்பத்திற்கும் இடையே , பிரம்மன் சிறிது ஓய்வுஎடுத்துக்கொண்டிருக்கும்போது , ஹயக்ரீவன் என்ற குதிரை முகம் கொண்ட ஒரு ராட்சதன் ,பிரம்மதேவனிடமிருந்து வேதங்களைத் திருடி ஒளித்துவைத்து விட்டான். இந்த வேதங்களை மீட்கவும்,கல்பத்தின் இறுதியில் வரவிருக்கும் பிரளயத்திலிருந்து அத்தியாசமானவைகளை காப்பாற்றவும்,  விஷ்ணு, ஒரு பெரிய மீனின் அவதாரம் எடுத்தார்.
பூமியை ஆண்டு வந்திருந்த சத்தியவிரதன் என்ற மன்னனுக்கு தரிசனம் தந்து அவனிடம் "இன்னும் ஏழு நாட்களில் ஒரு பெரும் பிரளயம் வரவிருக்கிறது. அப்பிரளயத்திலிருந்து அடுத்த கல்பத்திற்கான பொருள்களைக்  காக்கவேண்டும். நீ மூலிகைகள், விதைகள் , வரப்போகும் கல்பத்துக்கு தேவையான பிற அத்தியாவசியப் பொருள்கள், இவைகளை எடுத்துக்கொண்டு சப்தரிஷிகளையும் அழைத்துக்கொண்டு தயாராக இரு " என்று கூறி ஒரு பெரிய படகை அளித்தார். பிரளயம் வருமுன் சென்று ஹயக்கிரீவனுடன்  போரிட்டு அவனைக்   கொன்று வேதங்களை மீட்டார். சத்தியவிரதனிடம் , பிரளயம் வருகையில் வாசுகி என்னும் பாம்பைக் கயிறாக உபயோகித்து அப்படகை மீனின் உருவில் இருக்கும் தன்னுடைய கொம்புடன் கட்டிவிடுமாறும் கூறினார். அவனும் அவ்வாறே செய்ய, பிரளயத்தின் போது , படகை மூழ்காமல் காத்து , ரிஷிகளையும் , அடுத்த கல்பத்துக்குத் தேவையான பொருட்களையும், சப்த ரிஷிகளையும் வேதங்களையும் ரக்ஷித்தார். 
 


ஆழ்கடலின் ஆழத்தில் நான்முகனின் நான்மறையை
ஆழ்த்தி மறைத்திட்ட அஸ்வமுக* தானவனை**
மீனினவ தாரத்தில்  போரிட்டு    மீட்டவன் 
வானுறை வைகுண்ட னே   

(பல விகற்ப இன்னிசை வெண்பா )
)* அஸ்வமுக - அஸ்வம் - குதிரை.
** தானவன் - ராட்சதன் ;

At the end of one of the Kalpas, when Brahma was sleeping,  a demon by name Hayagriva , one who has the head of a horse , stole the Vedas. Sri Vishnu who is all pervading and omniscient observed this and decided to destroy he demon , retrieve the Vedas and restore them to Brahma to enable him to go ahead with his work of creation during the next Kalpa (day break).As the deluge (Pralaya) was near at hand, he decided to descend `down to earth' in the form of a `fish'

He took the form of a giant fish and revealed himself to the Great King Satya Vrata , and  told him that on the 7th day from then a great deluge (Mahapralaya) would take place when a severe tornado would rip through the Universe and destroy it. But, if Satyavrata could muster herbs, seeds and a pick of beings he wanted for the next Kalpa and keep ready, the fish would send a spacious boat in which all of them as also the Saptarishis (7 sages) would be accommodated and saved. The fish advised that Vasuki, the serpent should be brought and used as a rope for fastening the boat to the horns of the fish. Satyavrata did exactly as advised by the fish and the entire crew was saved. As the boat sailed throughout the night of Brahma, Lord Vishnu taught Satyavrata and the Saptarishis what is known as  "Matsya Purana.".

 During the 7 day waiting period the Lord in his gigantic fish form sought after the demon Hayagriva, killed him in a straight fight and retrieved the Vedas.

Thus, He accomplished the three tasks of saving the righteous, destroying the demon and retrieving Vedas for establishing Dharma

No comments:

Post a Comment