Search This Blog

Jul 10, 2016

இரைச்சலா , சங்கீதமா?

இரைச்சலா , சங்கீதமா?



தினமும் பலப்பலவிதமான ஒலிகளைக்  கேட்கிறோம்.
அசைவே வாழ்க்கையின் அடையாளம்.
ஒலியில்லாமல் அசைவில்லை.
அதனால் , ஒலியில்லாமல் வாழ்க்கையும் இல்லை.
ஆனால் சிலருக்கு சங்கீதமாக இனிப்பது, சிலருக்கு இரைச்சலாக கசக்கிறதே?
இரைச்சலா , சங்கீதமா? படித்துப்  (கேட்டுப் ) பாருங்கள்!

அன்புடன்
ரமேஷ்


இரைச்சல்

சங்கீதம்

 

 

காலையில் கிண்கிணித்  தொலித்து எழுப்பிடும்

நேரம் காட் டியின் நில்லா இரைச்சல்

காக்கை குருவி பறவைகள் கூட்டம்

பற்பல விதமாய் போடும் இரைச்சல்

 

 

 

 

அதிகாலையிலே கடிகாரத்தின்

கிணு  கிணு  ஓசை சங்கீதம்

பறவைக ளெழுப்பும்  கீச் கீச் ஒலிகள்

காலை வேளையில்  பூபாளம்

வாசலில் நாட்தாள்  போடும் பையனின்

வண்டி செய்திடும் டப் டுப் இரைச்சல்

பள்ளிக்குச்  செல்லும் சிறுவரை அழைத்துச்

செல்லும் வண்டியின் பாம் பாம் இரைச்சல்

நாட்தாள் போடும் பையனின் வண்டியின்

தாளம் மேளத்தின் சங்கீதம்

பள்ளி ஊர்திக்குக்   காக்கும்  குழந்தைகள் 

சிரித்துப் பேசுமொலி  சங்கீதம்.

 

வீதிக்கு வந்தால் வகை வகையாக

காதைத் துளைக்கும்  வாகன இரைச்சல்

வெளியே போக வாகனம்  ஏறினால்

வாகனத்துள்ளும்  வானொலி இரைச்சல்

 

வீதியில் ஓடும் வாகன வரிசைகள்

வாழ்வெனும் நதியின்  நீரோட்டம்.

அவைகள்  எழுப்பும் ஒலிகள் உலகத்தின்

இதயத்தின் லப்-டப் சங்கீதம்.

 

நிம்மதியாக இருக்க விடாமல்

நில்லா  தடிக்கும் டெலிபோன் இரைச்சல்

மதியம் சிறிது ஓய்வெடுக்கையிலே

அடிக்கடி அடிக்கும் அழைப்பான் இரைச்சல்

 

கைபேசிகளில் விதவிதமாக

கூப்பிடும் ராகங்கள் சங்கீதம்.

தன்னந் தனியாய் வீட்டில் இருக்கையில் 

விருந்தினர் அழைப்பொலி  சங்கீதம்.

 

நாளும் முடிந்து தூங்க முயல்கையில் 

சுழலு மின்சார  விசிறியின்   இரைச்சல்

இரவு முழுவதும் இடைவிடாமல்

தெருவில் நாய்கள் குறைக்கும் இரைச்சல்.

 

சுழலும் விசிறியின் சீரிய சத்தம்

உறங்கச்  செய்யும் சங்கீதம்.

தெருவில்  நாய்கள் குறைக்கும் சத்தம்

திருடரைத் துரத்தும் சங்கீதம்.

இரவில் எங்கும் அமைதி சூழ்ந்தாலும் 

மனதில் மட்டும் மௌனமாய் இரைச்சல்.

பகலும் இரவும் எங்கும்  இரைச்சல்

வாழ்வே  அதனால் முழுதும்  எரிச்சல்

 

 

நாளிலும் பொழுதிலும் பலஒலி கேட்டபின் 

இரவின் மௌனமும் சங்கீதம்.

நன்றாய் இன்றொரு நாளும் முடிந்தபின்

நாளையும் தொடரட்டும் சங்கீதம்.

 

 

5 comments:

  1. The wailing of 108 could have been added appropriately!All other ones aptly captured and makes us to actually connect with!

    ReplyDelete
  2. The wailing of 108 could have been added appropriately!All other ones aptly captured and makes us to actually connect with!

    ReplyDelete
    Replies
    1. Super. Except for the air horn noise!!

      Delete
    2. yes. My views also. This does not merge very well with the rest , particularly the sangeetham side. will try to modify this. thanks.

      Delete
  3. Ramesh, this is SVR. I listed and viewed my comment. How did if disappear? I wonder. I love the words MANATHIL IRAICHAL. Best wishes

    ReplyDelete