சில நாட்களுக்கு முன், ஒரு பதிவில், சித்தர் சிவ வாக்கியர் பாடல்களைப் பற்றி குறிப்பிட்டு இருந்தேன்.
தங்கு தடை இன்றி துள்ளிப் பாய்ந்து ஓடும் நதி போன்று, குதித்து வரும் சந்தங்களுடன் வரும் அவர் பாடல்களின் நடை, கருத்து ஆகிவைகளின் தாக்கத்தில் எழுந்த பாடல் இது.
படித்துக் கருத்தளியுங்கள்.
அன்புடன்
ரமேஷ்
அஞ்சுகச்ச உடையணிந்து தங்கப்பாத் திரத்திலே
அஞ்சுநதியின் நீரெடுத்து அஞ்சுபழத்தின் சாறுடன்
பஞ்சலோக சிலையின்மீது கொஞ்சம் கொஞ்சமாகவே
மஞ்சனங்கள் மட்டும்செய்யும் மதியிலாத மாந்தரே!
நஞ்சைபுஞ்சை நிலன்கள்நீச்சல் புகழும்பணமும் இனபிற
துஞ்சும்போதும் துலங்கும்போதும் தேடிநாடி ஓடுவீர்.
வெஞ்சினமும் கொள்ளுவீர்; வஞ்சனைகள் விலக்கிடீர்;
பஞ்சுமெத்தை பகட்டுவாழ்வில் அமிழ்ந்துமூழ்கி உழலுவீர் ;
செஞ்சபாவக் கணக்குத்தீர க்ஷேத்திரங்கள் செல்லுவீர்;
கொஞ்சமேனும் பாவம்குறைய தானதர்மம் செய்குவீர்;
சொல்லின்பொருளும் புரிந்திடாமல் ஸ்தோத்திரங்கள் சொல்லுவீர்.
கெஞ்சிநீங்கள் கேட்டிடினும் குப்தன் கணக்கில் குறையுமோ?
எஞ்சிநிற்கும் கொஞ்ச வாழ்வில் அஞ்சுபுலனை அடக்கியே ;
அஞ்சுபொறியை அடக்கியாண்டு ஐம்மலங்கள் விலக்கியே
அஞ்சுஅட்ச ரங்கள்கொண்ட பரமன்நாமம் பாடினால்
நஞ்சையுண்ட நீலகண்டன் அருளுனக்குக் கிட்டுமே!
பஞ்சில்பட்ட தீப்பொறியே பெருந்தழலாய் ஆகும்போல்
நெஞ்சில்ஞானப் பொறியும்பட்டு தீபமாக எரியுமே!- பிர
பஞ்சமெங்கும் உள்ளபொருளில் ஊடுருவி உறைந்தவன்
பிஞ்சகனின் கழல்பணிந்து வாழ்கவாழ்க வாழ்கவே!

அஞ்சாமல் எடுத்துரைத்தாய் நண்பா ! What is the equivalent word in Tamil for hypocrisy ?
ReplyDeleteகருத்துக்கு நன்றி, வெங்கட்.
Deletehypocrisy -பாசாங்கு அல்லது போலித்தனம் என்று கூறலாம்.
ஆனால் நான் குறிப்பிட்டு இருப்பவர்கள் hypocrites அல்ல.
Hypocrites என்பது, தான் நம்பாத ஒன்றை நம்புவதுபோல் மற்றவர்களுக்குக் காட்டுவதைக் குறிக்கும்.
ஆனால், இவர்கள் நடிப்பதில்லை !
தாங்கள் செய்வது சரி என்று முழுதாக நம்புகிறவர்கள்!
சரியான வழி எது என்பதைப் பற்றியதே இக் கவிதை.
பின்னவைகளை செய்யாமல், முன்னதை கை விடுவது மட்டும் பயனளிக்காது.
Namaskaram Ayya,
ReplyDeleteSince I dont have Tamil Font pardon my usage of tami, through English. Aindhin magathuvathai eduthuraitha ungaluku nandri koora vaarthaye illai. Antha panchaksharam onru mattum thaan nammai meetka koodiya brahmasthram enbathai azhagaga edutu uraithamaikku kodana kodi nandri.......
Very well written poem.Every sentence is a gem.
ReplyDeleteVery well written poem.Every sentence is a gem.
ReplyDeleteEnjoyed reading the poem . good advice at the end .
ReplyDelete