இன்று காலை என்
மனைவியோடு காலைக் காப்பி அருந்தியவாறு பேசிக்கொண்டிருக்கையில் அவள் சொன்னாள் - "நேற்று காந்தி இறந்த நாள். இதை ஒருவரும் கண்டு கூடக் கொள்ளவில்லை.".
இது சுருக்கென்று
என் மனதில் தைத்தது.
தினசரிகளைப் புரட்டிப்
பார்க்கையில் அது பற்றி ஒரு செய்தி கூட தென்படவில்லை.
" வாழ்க நீ
எம்மான் " என்று பாரதி பாடிய நாள் போய் , " தேச பிதா" என்று போற்றிய
நாள் போய் ,
சற்றேறக்குறைய அவரை
முற்றும் மறந்து , அவர் கொள்கைகளைத துறந்து வெகு தூரம் வந்து விட்டோம்.
யாரைக் குறை சொல்வது?
அவர் பெயர் சொல்லி
ஆட்சிக்கு வந்து, சுய நலத்திலும், லஞ்ச ஊழல்களிலும்
திளைத்து , காந்தியை "பொருத்தமில்லாதவராக" (irrelevant ) ஆக்கிவிடவர்களையா
, அதை தொடர்பில்லாத காட்சியாளர் போல் பார்த்துக்கொண்டிருக்கும் நம்மையா?
அன்புடன்
ரமேஷ்
அன்புடன்
ரமேஷ்
ஜனவரித் திங்கள்
முப்பதாம் நாள்
கோட்சே காந்தியைச் சுட்ட தினம்.
இனவெறி மதவெறி இரண்டையும் எதிர்த்த
காந்தித் தாத்தா செத்ததினம்.
கோட்சே காந்தியைச் சுட்ட தினம்.
இனவெறி மதவெறி இரண்டையும் எதிர்த்த
காந்தித் தாத்தா செத்ததினம்.
நினைவுச் செய்திகள் ஏதுமில்லை.
மனம்மிக வருந்துது சினம்மிகப் பொங்குது
இந்த மாந்தரை நினைக்கையிலே!
காந்தியின் படமின்று இல்லையெனில்
இனம்கண்டு கொள்ளார் இன்றைய தலைமுறை
இப்படி ஒருவர் இருந்ததையே!
ஆக வேண்டுமெனக் கனவுகண்டார்.
மதம்தலைக் கேறிய ஆட்சி யாளரால்
ரோம^ ராஜ்யம்போல் அழிகிறதே! ^ roman empire
சுயமாய் நம்மைநாம்
ஆளுங் காலம்
வந்தது எனநாம் மகிழ்ந்ததுபொய்
சுயநலக் காரர் ஆட்சியில் அமர்ந்து
சூறை யாடுறார், இதுவேமெய்.
துயர்படும் உழவர்
நிலைகண்டு வருந்தி வந்தது எனநாம் மகிழ்ந்ததுபொய்
சுயநலக் காரர் ஆட்சியில் அமர்ந்து
சூறை யாடுறார், இதுவேமெய்.
மேலா டைஅணி வதைத்துறந்தார்.
இவர்பெயர் சொல்லி ஆட்சிக்கு வந்தோர்
இடுப்பா டையுமே உருவுகிறார்!
ஒருமுறை தானே கொன்றிட்டான்!.
தீதொன்றும் நினையா தூயவர் இவரை
தினம் தினம் இவரோ கொல்லுகிறார்.
முச்சந்தி முனையில் இவர்சிலை நிறுவி
வருடம் ஒரேமுறை வணங்கிவந்தார்.
இச்சம யத்தில் அதையும் விடுத்து
கோட்சே சிலையை நிறுவுகிறார்!
கரம்சந்த் காந்தி
இன்று இருந்தால்
தற்கொலை செய்து கொள்வாரோ? இல்லை
கரந்தனில் "கலஷ்நி கோவை"^ எடுத்து ^ Kalashnikov gun
கயவ ரிவரையே கொல்வாரோ?
தற்கொலை செய்து கொள்வாரோ? இல்லை
கரந்தனில் "கலஷ்நி கோவை"^ எடுத்து ^ Kalashnikov gun
கயவ ரிவரையே கொல்வாரோ?
On Gandhi's Anniversary 11:11 hrs is time to salute the martyrs and we used to observe a minutes silence in the school days. First 2 years of my joining we observed in Dura shop floor.
ReplyDelete