எப்போது வேலையிலிருந்து ஒய்வுபெறுவேன் என்று காத்துக்கொண்டிருந்ததுபோல் பல்வேறு உபாதைகள் ஒய்வு பெற்ற உடனேயே வந்தடைகின்றன!
இது என்னுடைய அனுபவம் மட்டும் அல்ல! என் நண்பர்கள் பலரும் இதையே சொல்கிறார்கள் !
மிகவும் பிரபலமான உபாதைகள் மூட்டு வலி, முதுகு வலி, சர்க்கரை வியாதி ஆகியவை.! அவற்றுள் என்னை ஒரு ஆறு மாதத்திற்கு மேலாக விடாமல் பிடித்து ஆட்டுவது கழுத்து-தோள்பட்டை வலி.
இதனால் நான் படும் பாடு பற்றி ஒரு கவிதை!
இது என் வயதொத்த பலரின் நிலையைப் பிரதிபலிக்கும் என்பதில் ஐயம் இல்லை!
அன்புடன்
ரமேஷ்
நோகாமல் நானிருக்கும் நாளுமினி வந்திடுமோ ?
எழுத்துப் பிழை என்றால் அழித்துத் திருத்திடலாம்
கழுத்துப் பிழை திருத்த வழியின்றித் தவிக்கின்றேன்
அழுத்திப் படுத்தாலும் அவதிகள் குறையாமல்
விழித்துக் கழிக்கின்றேன் இரவுகள் முழுதையுமே !
வாய்வுப் பிடிப்பென்று பலநாட்கள் வரைநானும்
வேதனையைப் பொறுத்திட்டு வாளா திருந்திட்டேன்.
தேய்ந்திட்ட எலும்புகளும் தொய்ந்திட்ட தசைநாரும்
தானிதற்குக் காரணமாம் என்றே பிறகறிந்தேன்.
காந்தக் கதிர்வீச்சு^ சோதனைகள் பலசெய்து (^mri )
எந்தெந்த தசை நார்கள் கிழிந்ததெனக் காட்டிட்டார்.
பந்து கிண்ண மூட்டொன்று பழுதாகிப் போனதென்றார்.
நொந்துபோய் வலிதீர வழிதேடி அலைகின்றேன்.
மூலிகை மருந்துகள் தடவியும் குறையவில்லை.
வாலினி ஸ்பிரே^^ அடித்தும் வலியோ அடங்கவில்லை
பெங்கே^^ தடவினாலும் எங்கே குறைகிறது?
மங்கிப் போகாமல் பொங்கி எழுகிறது.
இதமான சூடதின்பின் பதமான பனிக்கட்டி
கதகதக்கும் மெழுகென்று விதவிதமாய் முயன்றாச்சு
அகச் சிவப்பு ^ அலை வீச்சு தசை இழுக்கும் கருவியென
மிகப்பலவாய் மருத்துவ முறைகளுமே வீண் செலவே!
ஆயுர்வேத மருந்துகளும் அக்குபங்க்சர் ஊசிகளும்
நோயிதனைத் தீர்க்குமென்று நம்பினதே மிச்சம்!
வருமக் கலையொன்றே மருந்தாகும் இதற்கென்று
ஒருசிலரும் உரைத்தாலும் முயன்றிடவே எனக்கச்சம்!
யோகா பயிற்சிகளைத் தவறாமல் செய்தாலும்
போகாமல் துரத்துதே பாழாய்ப் போகும் வலி.
சாகா வரம் பெற்று சேர்ந்திட்டதோ என்தோளில் ?
நோகாமல் நானிருக்கும் நாளும் வந்திடுமோ
^^ வலி நீக்கி மருந்துகள்
^ infra red
என் பதிவுகளைப் பற்றிய உங்கள் கருத்துக்களை எளிதாக நீங்கள் அளித்திட உதவியாக ஒரு புதிய 'பன்முகத் தெரிவுப் பகுதி ' ((multiple choice option )இணைக்கப்பட்டுள்ளது. (see at the bottom of the page). இதில் சென்று உங்கள் மதிப்புரைகளைப் பதிக்கலாம். தவறாமல் செய்யுங்கள். இதை முந்தைய எல்லாப் பதிப்புகளுக்கும் செய்யலாம். உங்கள் கருத்துக்கள் எனக்கு மிகவும் உதவும். நன்றி.
please take a few seconds to rate this poem using the multiple choice option section , at the bottom of the blog. This feedback will be useful to me for improving . The rater,s identity is protected . Please do this for the earlier posts also .

அன்பு ரமேஷ்
ReplyDeleteஉங்களுக்கு தோள் என்றால் எனக்கு முழங்கால் மூட்டு.இது வேதனையில ஒற்றுமை.ஆனால் அதை கவிதையாக வெளிப்படுத்தும் உம் திறன் கண்டு வியக்கிறேன்!
நன்றி, NRN .இப்போது ஒரு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறேன். பயனிருந்தால் பகிர்ந்துகொள்கிறேன்! இல்லாவிட்டால் என்ன, அடுத்த கவிதைக்கு ஒரு கருப்பொருளாக ஆக்கிவிட்டால் போயிற்று!
ReplyDeleteAbsolutely classic! God Bless!
DeleteAbsolutely classic! God Bless!
DeleteDear Ramesh,
DeleteSuper. This one I enjoyed more than on any of your other "Kavithais". Out of sheer curiosity, whether you can write on the solution by which I got rid of the back pain (both on the spinal cord and the right side of the hip.
கவின் தமிழில் கவி எழுதும் இக்கவியின் கவிதையினை
ReplyDeleteசெவிமேடுத்துச் செவ்வனவே பாராட்டும் நற்பண்பு
தவழ்கின்ற சிறுமழலை தத்திநடை பழகுகையில்
புகழ்கின்ற பெற்றோர் பாங்கே!
Great Ramesh. This is "Valiyilum Kavithai". Enjoyed it
Deleteதோள் கண்டார் தோளே கண்டார்- என்ற வாசகம் நினைவுக்கு வருகிறது. இதில் அதிசயம் என்னவென்றால் நீங்கள் வேலையில் இருக்கும் போது இருந்த சுமயை இறக்கிய பின்னரும் உங்கள் தோள் -வலிமை அல்லவா பெற்றி இருக்க வேண்டும் ? வலியை அல்லவா பெற்றி இருக்குது?
ReplyDeleteஉங்களுக்கு தோளினால் உபத்ரவம் - எனக்கு தோலினால் தொல்லை !! இரவு முழுவதும் தூங்க முடியாமல் அரிப்பு ! நானும் உங்க மாதிரி ஒரு "தோல்காப்பியமே" எழுத தயாராக இருக்கேன் !!
தோள் கண்டார் தோளே கண்டார் என்பது போல்,
ReplyDeleteவலி கண்டார் வலியே கண்டார் என்றாகி விட்டது.
பணியாற்றும் வரை வாராதிருந்த வலியும் வேதனையும்
பணிமூப்பு பெற்றவுடன் வந்து ஒட்டிக்கொள்கிறது.
மருந்துக்கும் பயிற்சிக்கும் அசரவா போகிறது.,
நாமும் எதனைத் தின்றால் பித்தம் தெளியும்
என்று அலைகிறோம் விடை கிடைக்காமல்.
எனது அண்ணனே எனக்கு வழிகாட்டி.,
தனக்குத் தெறிந்த ஆயுர்வேத எண்ணைகளைத்
தடவிக்கொண்டும், தனக்குத் தெறிந்த உடல்
பயிற்சிகளைச் செய்துகொண்டும் வலிகளையும்
பிரச்சனைகளையும் ஏற்று வாழ்வதே சிறந்தது...
My brother is one who has learnt to live with all his "pains and problems". He is suffering with acute Astro arthritis for the past 30 years, and I have always seen him saying "அது அப்படித்தான், இதுக்குப்பபோய் உக்காந்துட முடியுமா., முடிஞ்ச வரை பாக்கலாம்", with a smiling face. Just sharing my views. No strings attached.
I fully agree with this- we will have to live with minor ailments so long they are not debilitating. I get a feeling it is the retirement from work that has made people focus on the body- when they are preoccupied with the job they are indifferent to nagging pains!
ReplyDelete