Search This Blog

Nov 27, 2015

நேற்றும் இன்றும் -------

நேற்றும் இன்றும் -------
தமிழ் நாட்டில், குறிப்பாக சென்னையில்,  சென்ற இரு வாரங்களாக பெய்து வரும் பெருமழையைப் பற்றியும் அதன் பாதிப்புகளைப் பற்றியும் எங்கும் ஒரே பேச்சு ; கருத்துப் பரிமாற்றங்கள் .
ஆனால், இன்றைக்கு இரண்டு மாதங்களுக்கு முன் இருந்த நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் , வியப்பாக இருக்கிறது. "செப்டம்பர்,அக்டோபர் மாதங்களில் இவ்வளவு வெய்யில் கொளுத்துகிறதே!"என்று அங்கலாய்த்துக்கொண்டிருந்தோம். சாதாரணமாகப் பெய்யும் மழை கொஞ்சம் கூட இல்லாததால், ஏரிகளில் தண்ணீர் இருப்பளவு மிகவும் குறைந்து , "வரப்போகும் கோடையில் நிச்சயமாக தண்ணீர்ப் பஞ்சம் தான் "என்று பேசத் தொடங்கியிருந்தோம்.
அதைப் பற்றி அப்போது ஒரு பாட்டு  எழுத  ஆரம்பித்தேன்.! எழுதி முடிக்கும் முன்னாலேயே மழை கொட்ட ஆரம்பித்துவிட்டது. நிலைமை தலை கீழாக மாறிவிட்டது!
இரண்டு நிலைமைகளையும் ஒப்பிட்டு ஒரு கவிதை!
அன்புடன் 

ரமேஷ் 


சென்ற மாத நிலைமை


ஆடி முடிந்து     அதன் பின்னே.     ஆவணி் வந்தும் ---           கோடை

சூடு தணிந்து     தூறல்  கூடப்        போடவேயில்லே    .-       மழை

மாரியுமே           பருவத்தில்             பொய்த்து                           விட்டதால்

ஏரிகுளம்.           ஆறு எல்லாம்        வத்திப்                                 போச்சுதே!

பூண்டி புழல்             ஏரி மற்றும்               செம்பரம்பாக்கம்   -  அதைத்

தாண்டிகொஞ்சம்  தெற்காலே                 மதுராந்தகம் -             மற்றும்

வீராணம்.                   எல்லாமே                  வற்றிப் போனதே -    அந்த

காரணத்தால்.            எல்லோருக்கும்         கவலை                         யாச்சுதே !


காவிரியும்                  கிருஷ்ணாவும்          கையை விரிக்கையில் -     வேறு

யாரிந்த                         நகருக்கு                      நீர்  தருவார்கள் ?-               மெட்ரோ 

வாரியத்தின்               பின்னாலே                 ஓடவேண்டுமே -               தண்ணீர் 

லாரிகளும்                  எங்கே என்று            தேடவேண்டுமே!


இன்றைய நிலைமை


தண்ணீர்த்                  தட்டுப்பாட்டுக்        கவலை மாறியே  -       எல்லார் 

தலைக்குமேலே    தண்ணீரென்ற               நிலைமை                      ஆச்சுதே !

வங்கக்க.                 டலழுத்தத்.                   தாழ்வு மண்டலம் -       வந்து
.  
இங்கே                      பெரும்பு.                      யலாய் உருவா              னதே!


கரைகடந்து             விரைந்து வந்த             கடுங் காற்றிலே               நிறைய 

மரம் விழுந்தது  ;  மழை பொழிந்தது        மிகையாகவே.                 மக்கள் 

கரங் கூப்பி             மழை வேண்டிய           நிலை மாறியே -           இன்று

வரம் வேண்டு       வதோ மழையின்          சீற்றம்                             குறையவே!


ஏரியெல்லாம்          கரை நிரம்பி                 வழிந்ததனாலே --         நீர்  உள்

ஏறியதால்                வீடுகளே                           ஏரியானதே! -              கரை

புரண்டோடும்        அடையாற்றின்               இருமருங்கிலும் -       உள்ள

தெருக்களிலே         படகுக் கூட்டம்              பவனி                            வருகுதே!


தொலைபேசி          தொலைக்காட்சி            தொடர்பு  போனபின்---    கையில்                      

அலைபேசி               ஒன்றேதான்                      நிலைத்து                          நிற்குதே!

நிலை குலைந்து       நிற்கின்றார்                       நகர மக்களே -                 அவர்கள்

தலைஎழுத்து           என்று மாறி                         துயரம்                                தீருமோ.


வாருதியை                வாரி வந்த                           மாரியினாலே -           இங்கே

சேருகின்ற                 நீர் அனைத்தும்                   தெருவில்                   தேங்கியே

நாறுகின்ற                 நகரமிது                                  நரகம் ஆனதே -         இதைக்

கூறுவது                      யாரிடமோ?                         தெரிய                           வில்லையே!

No comments:

Post a Comment