விநாயகர்
பதிகம் - பகுதி -1
சென்ற
பதிவில் சொல்லியிருந்தபடியே பதிகத்தின் பாடல்களை , தகுந்த விளக்கக் குறிப்புகளுடன்
எழுதி இருக்கிறேன். ஆனால் இந்த முறை
முதல் ஐந்து பாடல்களை மட்டும்
வெளியிடுகிறேன். ( பாதி மட்டும் வெளியிடுவதால்
இதை பாதிகம் என்று சொல்லலாமோ?).
மற்றவை
அடுத்த வாரங்களில்.
பாடல்
|
குறிப்பு .
|
வானுறை ஈசரும் ஏனைய தேவரும்
கானுறை மாத்தவ ஞானியோரும் ---தீநிறை வேள்விகள் செய்யுமுன் வேண்டி வணங்குவது வேழமுகன் பாதந் தனை (1) |
எந்தக் காரியத்தையும், , கடவுளர்கள்,பிற
தேவர்கள், முனிவர்கள் ஆகிய எல்லோரும் கூட விநாயகனைத் தொழுதா பினனரே தொடங்குவார்கள்.
இல்லையேல் காரியம் வெற்றி ஆகாது! சிவபெருமான் ஒரு சமயம் போருக்குச் செல்லுமுன் இதைச்
செய்ய மறந்ததால் , அவரது தேர்ச் சக்கரம் உடைந்தது என்பது புராணம்.
|
காரியம் யாவையும் எண்ணித் தொடங்குமுன்
பாருறை மாந்தர் தொழுவர் --- கரிமுகத்
தூயவன் மாயோன் மருகனுறை கோயிற்கு
|
தெய்வங்களே இப்படி என்றால், இவ்வுலகு மாந்தர்களைப் பற்றி
கேட்கவா வேண்டும்? அவர்களும் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று பூசித்த பின்னரே காரியம்
தொடங்குவர்.
|
காவியமாம் பாரதக் காதையினைப் பன்னூறு
பாயிர மாய்ச்செய்த மாமுனிவன் -வாயுரைக்க
தந்தம் உடைத்தெழுது கோலாகச் செய்தானை
|
வேதவியாசர் சற்றும் நிறுத்தாமல்
தொடர்ச்சியாக பாரதக் கதையைச் சொல்லவேண்டும் என்றும், அவர் சொல்லச் சொல்ல அவர் சொல்லுவதைப்
புரிந்து கொண்டு , சற்றும் நிறுத்தாமல் விநாயகர் எழுதவேண்டும் என்று ஒப்பந்தம். அவர் வேகமாக எழுதும்போது
எழுதுகோல் உடைந்துவிட்டது! என்ன செய்வது? உடனே விநாயகர் ஒரு தந்தத்தை உடைத்து , அதை
எழுத்தாணியாக உபயோகித்து பரதக் கதையை எழுதி முடித்தார்! அதை விளக்கும் பாடல் இது.
|
கைலையில் குடிகொண்ட பெற்றோர்
தமைச்சுற்றி
எலிவா கனமேறி வலம்வந்து -உலகைஎலாம்
சுற்றியதற் கொப்பிதெனச் செப்பிட்டு மாங்கனியைப்
பெற்றவனின் பாதமதைப் பற்று. (4)
|
விநாயகர் பற்றிய கதைகளில் மிகவும்
பிரசித்தி பெற்ற கதை-- அன்னையையும் தந்தை வலம் வந்து மாங்கனியைப் பெற்ற கதை. விளக்கம் எதுவும் தேவையில்லை. (4)
|
குறுமுனி அகத்தியன் கைலயம் சென்றவண்
இருந்து கொணர்ந்ததண் கங்கைநீர் – நிறைஜபக்
கலத்தினைக் கவிழ்த்துக் காவிரியாய்த் தென்திசை
நிலம்செழிக்க விட்டவனை
வணங்கு. (5)
|
விந்தியமலையின் தெற்குப் பகுதிகளின்
தண்ணீர்ப் பற்றாக்குறையை நீக்க ஒரு ஜீவ நதியை உருவாக்க அகத்திய முனி கங்கை நீரை ஒரு மண்டலத்தில் எடுத்து வந்தார். தென்மேற்கு மலையில் ஒரு இடத்தில் தன் கமண்டலத்தை கீழே வைத்து இளைப்பாறுகையில் , விநாயகர் ஒரு காக்கை வடிவில்
வந்து ( ஒரு அந்தணச் சிறுவன் வடிவில் என்றும் சொல்வதுண்டு), அந்தக் கமண்டலத்தைக்
கவிழ்த்தார். அங்கிருந்து காவிரி உற்பத்தி ஆகியது ; அந்த இடம் தான் தலை காவேரி :
-என்பது ஐதீகம்.
|
No comments:
Post a Comment