வாக்குச் சாவடிகள்
தேர்தல் ஜுரம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. ஆளுக்கு ஆள் வாக்குறுதிகளை அள்ளி அள்ளி வீசுகிறார்கள். தேர்தல் முடிவுகள் வந்தபின்பு எவருக்கும் இந்த வாக்குறுதிகள் நினைவுக்கு இருப்பதில்லை. மக்களும் கேள்வி கேட்பதில்லை. அவர்களுக்குப் பழகிவிட்டது. வாக்குச் சாவடிக்குக் சென்று வோட்டுப் போடுவதோடு சரி.
இந்த ஒட்டுப் போடும் இடத்திற்கு ஏன் " வோட்டுச் சாவடி" என்று பெயர் வந்தது? இது பற்றி ஒரு வித்தியாசமான பொருள் விளக்கம் - ஒரு வெண்பா வடிவில்!
படித்துச் சிரியுங்கள்!!
அன்புடன்
ரமேஷ்
வாய்க்கெல்லாம் வந்தபடி வாக்குறுதி கள்வீசி
வாய்க்கரிசி போட்டுவாக் காளர் களைவாங்கி
"சாவடிப்ப தாலே"தான் ஓட்டிடும் பந்தற்கு* *ஓட்டிடும் பந்தல்= polling booth
"சாவடி" என்றே பெயர்.
(பலவிகற்ப இன்னிசை வெண்பா)